இந்தியர்களில் 3இல் ஒருவர் தூக்கப் பற்றாக் குறையால் அவதிப்படுவதாக வேக்ஃபிட் (Wakefit) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 4500 பேரிடம் நடத்திய ஆய்வில் 58 விழுக்காடு பேர் இரவு 11 மணிக்கு பின்னரே உறங்க செல்வதும், 44 விழுக்காடு பேர் விழித்தெழும்போது சோர்வாக உணருவதாகவும் தெரிய வந்துள்ளது.
18 விழுக்காடு பேர் காலை 9 மணிக்கு மேல் தான் எழுகின்றனராம். படுக்கையில் கைப்பேசி பயன்படுத்து வதே இதற்கு முக்கிய காரணமாம்.
பள்ளி திறந்த
உடனேயே புத்தகங்கள்
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ஆம் தேதி பள்ளிகளை திறக்க திட்ட மிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்த அன்றே மாணவர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கிடங்கில் இருந்து பள்ளிக்கு பாடப்புத்தகங்களை அனுப்பி வைக்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், பள்ளி திறப்புக்கு முன், வகுப்பறைகளில் தூய்மைப் பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.