பழனியும் இஸ்லாமியரும்
[ஆய்வாளர் பெரும்புலவர் செ.ராசு – ஈரோடு]
“பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதவர்க்கு அனுமதியில்லை” என்ற அறிவிப்பை எடுத்ததற்கு நடந்த ஆர்ப்பாட்டச் செய்தி இதழ்களில் வந்தது. முதலில் இந்த அறிவிப்பு வைத்ததே தவறு.
முன்பு பழனிகோயில் கிழக்குப் பக்கம் உள்ள தனி வழியில் வந்து – இஸ்லாமிய முருக பக்தர்கள் மண்டபத்தில் சர்க்கரை படைத்து வழிபட்டுள்ளனர்.
பின் நாளில் இவ்வழியை அடைத்தனர்.
“போகர் சமாதி” மட்டுமல்ல. “பழனி பாபா” என்ற முருகபக்தரும் கோயிலில் சமாதி ஆனார் என்பர்.
பழனி செப்பேடுகள் பழனி முருகனை “ராவுத்தன்” என்று பாராட்டுகின்றன. புலவர்கள் “மயிலேறும் ராவுத்தனே” என்று புகழ்ந்தனர். ராவுத்தன் என்பது இஸ்லாமிய குதிரை வீரரைக் குறிக்கும் சொல்!
புலவர் காதர் மொய்தீன் மஸ்தான் “பழனியாண்டவர் மாலை” பாடியுள்ளார். தாராபுரம் என். காதர் முகைதீன் ராவுத்தர் “பழனியாண்டவர் வழி நடைச் சிந்து” பாடியுள்ளார் (1909).
என்.கே. முகம்மது ஷெரீப் “பழனியாண்டவர் தல வரலாறு” எழுதியுள்ளார்.
ஆம். பழனி முருகன் இஸ்லாமியருக்கும் உரியவர்தான்.
பழனி வரலாற்று நூலில் பின்வரும் குறிப்பு உள்ளது.
Curiously enough, Musalmans also believe in the efficacy of prayer to this shrine. Ravutans go the little door at the back (east) of it and make their intercessions and offer sugar in the mantapam immediately inside this. They explain Their action by saying that a Musalman fakir, called palni Baba, is buried within the shrine.