திருச்சி – பஞ்சப்பூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பேருந்து வளாகம், கனரக சரக்கு வாகன முனையத்தைத் தமிழர் தலைவர் பார்வையிட்டார்!

1 Min Read

திருச்சி – பஞ்சப்பூரில் கடந்த 8.5.2025 அன்று ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை திறந்து வைத்து, ரூ.236 கோடி மதிப்பில் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை திறந்து வைத்து, அதன் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலையையும் திறந்து வைத்தார். அதன் பின்னர், ‘முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து வளாகத்தைத் திறந்து வைத்து அங்கே அமைக்கப்பட்டுள்ள மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் சிலையை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு

மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள மேற்கண்ட இடங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, நேரில் பார்வையிடச் சென்றார். அவரை, திருச்சி மாநகர மேயர் அன்பழகன் சால்வை அணிவித்து வரவேற்று, அனைத்துப் பகுதிகளையும்பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார்.

மக்களின் பயன்பாடுகளைக் கருதி, ஒவ்வொன்றும் சிறப்பாக அமைந்துள்ளதை (ஓய்வறை, பயணியர் தங்குமிடம், காத்திருப்போர் பகுதி, உணவகங்கள், விற்பனை அங்காடிகள், மோட்டார் வாகன உதிரி பாக விற்பனை பகுதிகள், தாய்மார்களுக்கான தனி அறை, நவீன கழிப்பறை வசதிகள், உலகத் தரம் வாய்ந்த கட்ட அமைப்புகள், அனைத்துப் பகுதிகளையும் கண்காணிக்கக்கூடிய நவீன கண்காணிப்புக் கேமிரா அறை,  தூய குடிநீர் ்அமைப்பு முறை) பாராட்டினார்.

பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோருடைய சிலைகளைப் பார்வையிட்டார். பொறியாளர்களுக்குப் பாராட்டினைத் தெரிவித்தார் (திருச்சி, 19.5.2025)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *