சென்னை, ஜூன் 28 – மேனாள் இந்திய பிரதமர் மாண்புமிகு வி.பி.சிங் சிலையினை நமது சங்கத்தின் கோரிக்கையை ஏற்று நமது சென்னை மாநிலக் கல்லூரி வளா கத்தில் நிறுவ ஆணையிட்ட மாண் புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் பி.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
26.6.2023 அன்று மாலை 4 மணியளவில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் கூடிய சங்கச் செயற்குழுவின் சிறப்புக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
தீர்மானம்: 20.4.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாட்டின் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தியாவின் பெருமைமிகு பிரத மர்களில் ஒருவரும், மண்டல் ஆணைய பரிந்துரைகளை ஏற்று, கோடிக்கணக்கான பிற்படுத்தப் பட்ட மாணவர்களின் கல்விக்கும், வாழ்வுக்கும் வழிகாட்டிய மாமனி தர் வி.பி.சிங் அவர்களின் முழு உருவச் சிலை, தமிழ்நாட்டின் தலை நகரான சென்னையில் நிறுவப்படும் என்று அறிவித்தார்கள்.
அதனை வரவேற்று நமது சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கம் சார்பாக அச்சிலையினை நமது மாநிலக் கல்லூரி வளாகத்தினுள் நிறுவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நமது கோரிக்கையினை ஏற்று, மாமனிதர் வி.பி.சிங் அவர் களின் முழு உருவச் சிலை நமது சென்னை மாநிலக் கல்லூரியில் நிறுவப்படும் என்று 25.6.2023 அன்று அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு நமது சங்கத் தின் கோரிக் கைக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் என்பதில் மனம் நெகிழ்ந்து நமது சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை உரித்தாக்குகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.