சிவகாசி
சிவகாசி மாநகர திராவிடர் கழகம் சார்பில், 13.05.2025 செவ் வாய் மாலை 6 மணியளவில், புறவழிச் சாலை நாராணாபுரம் சந்திப்பில், புரட்சியாளர் அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா, திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாநகரக் கழகச் செயலாளர் து.நரசிம்மராஜ் தலைமையில், விருதுநகர் மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன், இராசை மாவட்ட ப.க. அமைப்பாளர் வழவை முத்தரசன் ஆகியோர் முன்னிலையில், மாவட்டத் துணைச் செயலாளர் ச.சுந்தரமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.
மாவட்டத் துணைத் தலைவர் பூ.சிவகுமார் மந்திரமல்ல தந்திரமே எனும் அறிவியல் செயல் விளக்க நிகழ்ச்சி யினை சிறப்பாக நடத்தினார். மாவட்டத் தலைவர் இல.திருப்பதி தொடக்கவுரையாற்றினார். சி.பி.அய். மாநகரச் செயலாளர் தோழர் இக்பால், சி.பி.எம். மாநகரச் செயலாளர் தோழர் சுரேஷ்குமார் ஆகியோரது உரைக்குப் பின், தலைமைக் கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன் திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். மாநகர தி.மு.க. தோழர் பால்ராஜ், மாவட்ட தி.க. இளைஞரணித் தலைவர் இரா.அழகர், திருத்தங்கல் மா.நல்லவன், வெம்பக்கோட்டை தோழர் சுருளி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஜீவா முனீஸ்வரன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், தோழமை இயக்கத்தினர், பொதுமக்கள் என பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். நிறைவாக மாநகரத் தலைவர் மா.முருகன் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.
சாத்தூர்
சாத்தூர் திராவிடர் கழகம் சார்பில், 14.05.2025 புதன் மாலை 6 மணியளவில், முக்குராந்தல் கல் சந்திப்பில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, திராவிட மாடல் அரசின் வரலாற் றுச் சாதனைகள் விளக்கப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ப.க. தலைவரும், சாத்தூர் நகர்மன்றத் துணைத் தலைவருமான பா.அசோக் தலைமையில், மாவட்டத் தலைவர் கா.நல்லதம்பி, பொதுக்குழு உறுப்பினர் வெ.புகழேந்தி ஆகியோர் முன்னிலையில், மாவட்ட இளைஞரணித் தலைவர் இரா.அழகர் அனைவரையும் வரவேற்றார். அருப்புக்கோட்டை நகர் கழகச் செயலாளர் பா.இராசேந்திரன், எம்.ஜோதிநிவாஸ் (காங்கிரஸ்), ம.தி.மு.க. நகரச் செயலாளர் கணேஷ்குமார், சி.பி.எம். நகரச் செயலாளர் தோழர் எஸ்.சரோஜா, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் தோழர் சந்திரன், சி.பி.ஐ. மாவட்டப் பொருளாளர் தோழர் எஸ்.பழனிக்குமார் ஆகியோர் உரைக்குப் பின் தலைமைக் கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன் திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். தோழமை இயக்க நண்பர்கள், பொதுமக்கள் பெருமளவில் பங் கேற்றுச் சிறப்பித்தனர். நிறைவாக இளைஞரணித் தலைவர் க.திருவள் ளுவர் நன்றி கூற கூட்டம் நிறை வுற்றது.