கோபி, மே 16– 10.5.2025 அன்று காலை 10 மணி அளவில் கோபி சீதா திருமண மண்டபத்தில் ப.க மாவட்டத் தலைவர் சீனு. தமிழ்ச் செல்வி தலைமையிலும் கோபி மாவட்ட கழக செயலாளர் வே. குணசேகரன் முன்னிலையிலும் வரவேற்புரை ப.க. செயலாளர் திராவிட நிதி ஆற்ற, அரசியல் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கார் பிறந்தநாள் விழா உரையினை மாவட்டக் காப்பாளர் ந. சிவலிங்கம் அவர்கள் ஆற்ற புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா உரையினையும் அ.குப்புசாமி மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம் ஆற்ற கோபி மாவட்ட ப.க. உறுப்பினர் பொ.சாந்தியின் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா உரையுடன் ஆசிரியர் சாந்தி இணையர் இருவருக்கும் பயனாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் தந்தை பெரியாரின் படத்தினை ஆசிரியர் எஸ் எஸ்.மாணிக்கமும் அண்ணல் அம் பேத்காரின் படத்தினை தலைமை ஆசிரியர் ப. செல்லதுரை அவர்களும் நினைவு பரிசாக வழங்கி பெருமைப்படுத்தினார்கள்.
டாக்டர் அம்பேத்கர் படத் தினை மாவட்டக் காப்பாளர் இரா. சீனிவாசனும் பாரதிதாசன் படத்தினை ப.க மாநில அமைப் பாளர் தரும.வீரமணியும் தந்தை பெரியாரின் படத்தினை வழக்குரைஞர் மா.கந்தசாமியும் திறந்து வைத்தும் மாலை அணி வித்தும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் பகுத்தறிவாளர்கள் கவுரி சங்கர் சுமி எலக்ட்ரானிக்ஸ், நடுப்பாளையம் கந்தசாமி, பகுத்தறிவு ஆசிரியர்களான எஸ். எஸ். மாணிக்கம், ப. செல்லதுரை, சாம்பான், குருநாதன், சின்னச்சாமி, வடிவேல், க.சீதாலட்சுமி, ப. சங்கீதா, பொ.சாந்தி தலைமையாசிரியர் மற்றும் அவரது குடும்பத்தார் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
மேலும் பொதுக்குழு உறுப்பினர் க. யோகானந்தம், கழகத் தோழர் அந்தியூர் கோவிந்தன், இளைஞர் அணி சூர்யா, எழில், தனபால், சி.மதிவதனி, வே.தாரூக் நிவாஸ், த.லிவிஷ்னா, கு.சிறீஹரிணி, தக்ஷின் மற்றும் புதிதாக இணைந்த ப.க தோழர் ஆசிரியர் மாதப்பன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற இவ்விழா ப.க துணைத் தலைவர் க.பழனிச்சாமி அவர்களின் நன்றி யுடன் இனிதே முடிவுற்றது.