இந்தியாவில் COVID-19 தொற்றுநோயின் போது இறப்புகளின் எண்ணிக்கையை மக்களிடையே ஒன்றிய அரசு மறைத்துள்ளது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது
2021ஆம் ஆண்டு இறப்புகளின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டைவிட 20 லட்சம் அதிகமாக இருந்ததாக தகவல் பதிவு அமைப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தரவுகளின்படி 2021ஆம் ஆண்டில் 1.2 கோடி இறப்புகள் பதிவாகியுள்ளன, இது 2020ஆம் ஆண்டைவிட 26 விழுக்காடு அதிகம் ஆகும். 2021ஆம் ஆண்டில் கோவிட்-19 காரணமாக 4,10,000 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மரணங்கள் தொடர்பான மருத்துவ அறிக்கை கூறுகிறது.
இந்தத் தரவுகள் கோவிட்-19 தொற்றுநோயின் போது அதிக இறப்புகள் நிகழ்ந்ததற்கான உண்மையான தகவலை வழங்குகின்றன.
2016 முதல் 2020 வரை ஆண்டிற்கு 2-10 விழுக்காடு மட்டுமே மரணங்கள் அதிகரித்திருந்தது; ஆனால் 2020-2021 இடையே 26 விழுக்காடு என்ற அதிகமான எண்ணிக்கையில் மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மரணங்களில் வெறும் 23.4 விழுக்காடு மட்டுமே மருத்துவச் சான்றிதழ் பெற்றுள்ளன. இதனால் கோவிட்-19 மரணங்கள் பெரும்பாலும் மறைக்கப்பட்டுள்ளன.
கோவிட் மரணங்களில் மூச்சுக்குழாய் தொற்று நோயால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 68 விழுக்காடு என்று அரசு குறிப்பிட்டுள்ளது.
அதாவது கோவிட் மரணத்தை மறைக்க ‘மூச்சுக்குழாய் நோய்கள்’ என்ற பிரிவில் சேர்த்து மக்களிடையே உண்மையை மறைத்துள்ளது
2020 மற்றும் 2021 இரண்டு ஆண்டுகளிலும் மொத்தமாக 5.33 லட்சம் மரணங்கள் கோவிட்-19 காரணமாக நிகழ்ந்ததாக அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், மருத்துவ இறப்பு தொடர்பான அறிக்கையின் படி, 23.4 விழுக்காடு மரணங்களுக்கு மட்டுமே சான்றிதழ் பெற்றுள்ளதால், உண்மையான கோவிட்-19 மரணங்கள் இதைவிட அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கோவிட்-19 மரணங்கள் மிகுந்த அளவில் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, குஜராத் மாநிலத்தில் 2021-இல் பதிவு செய்யப்பட்ட கோவிட்-19 மரணங்கள் 5,800. ஆனால் அந்நாளில் மொத்த மரணங்கள் 1.95 லட்சம் (33 மடங்கு அதிகம்) இருந்தன.
கோவிட் காலத்தில் பெரியவர்களின் இறப்பு விகிதம் அதிகரித்தாலும், குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இந்தப் போக்கு முந்தைய ஆண்டுகளில் காணப்படவில்லை. கோவிட்-19 குழந்தைகளை விட பெரியவர்களுக்கு அதிக இறப்பை ஏற்படுத்தியது
இந்தியாவில் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கையைத் துல்லியமாக மதிப்பிட ஒன்றிய அரசு சரியான நிர்வாக வசதிகளை செய்துதரவில்லை.
தொற்றுநோயின் உண்மையான தாக்கத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள, இறப்பு தரவுகளை தொடர்ந்து கண்காணித்து மதிப்பீடு செய்வது அவசியம்
ஆனால் ஒன்றிய அரசு தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக கோவிட் இறப்பு தொடர்பான மரணங்களை மறைத்துள்ளது. அதேபோல் இறப்புச் சான்றிதழ்களும் தவறாகவே கொடுக்கப்பட்டுள்ளன.
2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் கோவிட் மரணம் தொடர்பான புள்ளிவிபரங்கள் கேட்கப்பட்டன. இதற்கு ஒன்றிய அரசு எங்களிடம் எந்த தரவுகளும் இல்லை, கோவிட் காலகட்டத்தில் பிரதமர் மோடியின் திறமையான நடவடிக்கையால் மரணங்கள் குறைவாக நடந்ததுள்ளன. மேலும் கோவிட் தொற்றை திட்டமிட்டு பரவாமல் தடுத்து இந்தியாவைக் காப்பாற்றி விட்டோம் என்று தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தனர்.
இந்த நிலையில் உலக அளவில் கோவிட் காலத்தில் இந்தியாவில் அதிக மரணங்கள் ஏற்பட்டுள்ளன என்று ஒன்றிய அரசின் பொது மரணப் பதிவுகள் மூலம் உண்மை வெளியாகி உள்ளது. (12.5.2025)
எதைத்தான் மறைப்பது, எதைத்தான் வெளிப் படுத்துவது என்பதில் விவஸ்தை இல்லாமல் போய் விட்டது. வளர்ச்சி என்பது இந்த அரசைப் பொறுத்த வரையில் வெறும் வார்த்தை ஜாலம்தான்.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வாக்குறுதி என்னாச்சு என்று கேட்டால், ‘பக்கோடா’ விற்பதும் வேலை தானே – ஒரு தொழில் தானே என்றவர்தானே பிரதமர் நரேந்திரமோடி! ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் என்னாயிற்று என்று கேட்டால் ‘அதெல்லாம் வெறும் ஜும்லா’ என்றவர்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா!
ராமராஜ்ஜியம் இப்படித்தான் இருக்கும்!