சென்னை, மே 16 நகர்ப்புற சுகாதார மற்றும் நல்வாழ்வு மய் யங்களில் தடுப்பூசி சேவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டமன்ற மன்றத்தில் 2025-2026ஆம் ஆண்டு மானியக்கோரிக் கையில் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப் பட்டன. அப்படி அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் நகர்ப்புற சுகா தாரம் மற்றும் நலவாழ்வு மய்யங் களில் தடுப்பூசி சேவைகள் விரி வாக்கம் செய்யப்படும் என்று அறிவிக் கப்பட்டது.
தடுப்பூசி சேவை விரிவாக்கம்
தமிழ்நாட்டில் முதலமைச்சர் 708 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மய்யம் அமையும் என்று அறிவித்து, கடந்த 2023 ஜூன் மாதம் 500 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்களை திறந்து வைத்தார்கள். மீதமிருக்கும் 208 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்களின் பணிகள் முடிவுற்று பணியாளர்கள் தேர்வு செய்யும் நடைமுறை மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் மூலம் நடைபெற்றுள்ளது. இன்னமும் ஓரிரு வாரங்களில் அந்தப் பணிகள் முடிவுற்று முதலமைச்சர் சென்னையிலிருந்து காணொளி வாயிலாக 208 இடங்களிலிருக்கின்ற மீதமிருக்கும் நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இதேபோல் இந்த மய்யங்களில் தடுப்பூசி சேவைகள் விரிவாக்கம் செய்யப்படும் என்கின்ற அறிவிப்பு தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகளிலும், 63 நகராட்சிகளிலும் அமைந்திருக்கின்ற 708 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்களில் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் பெரும் உதவியாக அமையும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 6 நோய்களை தடுப்பதற்கு விரிவுப் படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டம் 1978 இல் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை மேலும் வலுப்படுத்தி நாடு தழுவிய தடுப்பூசி திட்டம் 1985 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி திட்டத்தின்கீழ் 11 வகை யான தடுப்பூசிகளை கர்ப்பிணி தாய் மார்களுக்கும் 12 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், மஞ்சள் காமாலை, H இன்புளூயன்ஸா – நிமோனியா மற்றும் மெனிஞ்ஜிடிஸ், இரணஜன்னி, போலியோ, தட்டம்மை, ரூபெல்லா, ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு நோய், நியுமோகோக்கல் நியுமோனியா மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களிலிருந்து இந்த தடுப்பூசிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 9,58,000 கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் 8,76,000 குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மகத்தான சாதனை
தமிழ்நாடு தடுப்பூசி செலுத்துவதில் 99 சதவீதம் தொடர்ந்து நிறைவேற்றி மற்ற மாநிலங்களை காட்டிலும் ஒரு மகத்தான சாதனையை படைத்து வருகிறது. 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் 37 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் 255 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவனைகளிலும் 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஏறத்தாழ 1.2 மில்லியன் அளவிற்கு நோய்வாய்பட்டு இறக்கிறார்கள். இதில் 15.9 சதவீத அளவிற்கு இறப்புகள் நியுமோனியா தொற்றால் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தான் நியுமோகோக்கல் தடுப்பூசி தேசிய தடுப்பூசி திட்டத்தில் இணைக்கப்பட்டு குழந்தைகளுக்கு 6 வாரங்கள், 14 வாரங்கள், மீண்டும் 9ஆவது மாதத்தில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தைப் பொறுத்தவரை கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த திட்டத்தைப் பயன்படுத்தாமலேயே தடுப்பூசிகளை எல்லாம் இருப்பில் வைத்திருந்தார்கள். 2021 ஜூலை மாதம் 17ஆம் தேதி மீண்டும் இந்த தடுப்பூசி திட்டத்தை பூவிருந்தவல்லியில் இருக்கின்ற நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த திட்டமானது 2021 ஜீலை திங்கள் 27 முதல் தமிழ்நாடு முழுவ திலும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நியுமோகோக்கல் தடுப்பூசி 2021 ஆம் ஆண்டு முதல் தவணையாக 534634 பேருக்கும் இரண்டாவது தவணையாக 3,93,160 ஆக மொத்தம் 9,27,794 குழந்தைகள் பயன்பெற்றிருக்கிறார்கள். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் நியுமோகோக்கல் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் பரா மரிப்பு சேவைகள், தடுப்பூசி செலுத்துதல் உட்பட 12 விரிவான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறோம். இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.