I begin today by acknowledging the Traditional Custodians of the land on which we meet today and pay my respects to their Elders past present and emerging.
“நாம் கூடியிருக்கின்ற ஆஸ்திரேலியப் பெருநிலத்தின் பாரம்பரிய உரிமையாளர்களும் காப்பாளர்களுமான, இம்மண்ணின் மைந்தர்களுக்கும், இதுவரை இருந்த, இப்பொழுதும் இருக்கின்ற, எதிர்காலத்தில் வரவிருக்கின்ற மூத்தோர்களுக்கு என்னுடைய வணக்கத்தையும், நன்றியையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்”. என்பதே அதன் தமிழாக்கம்.
ஆஸ்திரேலியா கண்டத்தில் 1788இல் ஆங்கிலேயர்கள் நுழைந்தனர். அதுவரை தங்கள் மண்ணுக்குரிய வளங்களைத் துய்த்து அவற்றைக் காத்து, இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வந்த மண்ணின் மைந்தர்களாகிய பழங்குடி மக்களை இரக்கமற்ற முறையில் கொன்று குவித்த ஆங்கிலேயர்கள் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து ஏகாதிபத்தியத்தின் காலனி நாடாக அறிவித்தனர். மீதமிருந்த பழங்குடி மக்களுக்கு 200 ஆண்டுகள் துயரமும் போராட்டங்களும் தொடர்ந்தன.
1957 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் குடி உரிமையே கிடைத்தது. இரு நூற்றாண்டுகளுக்குப்பின் ஆஸ்திரேலிய அரசின் பிரதமராக கெவின் ரட் இருந்த பொழுது, அந்நாட்டின் பழங்குடி மக்களுக்கு தாங்கள் இழைத்த அநீதிகளுக்காக வருத்தம் தெரிவித்தார். மேலும் ஆஸ்திரேலிய மண்ணின் உரிமையாளர்கள் அந்நாட்டின் தொல்குடி மக்களே என்பதை அங்கீகரிக்கும் உறுதி மொழியை அனைத்து நிகழ்வுகளின் தொடக்கத்திலும் சொல்ல வேண்டுமென்பதை அரசு விதியாக்கியது. அதன்படி வரவேற்புரை தொகுப்புரை, நன்றியுரை கூறுவோர் உட்பட நாங்கள் அனைவரும் அந்த உறுதிமொழியைக் கூறியே எங்கள் உரையைத் தொடங்கினோம்.