பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் முப்பெரும் விருதுகள்

viduthalai
1 Min Read

 வல்லம், மே 15- வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கு, இந்திய தொழில்நுட்ப கல்விக் கழக “சிறந்த அத்தியாய தலைவர் விருது” (ISTE Best Chapter Chairman Award 2024), “சிறந்த பாலிடெக்னிக் ஆசிரியர் விருது” (ISTE Best Polytechnic Teacher Award  2024) மற்றும் “சிறந்த மாணவர் அத்தியாய ஆசிரியர் ஆலோசகர் விருது” (ISTE Best Student Chapter Faculty Advisor Award  2024) வழங்கப்பட்டது.

09.05.2025 அன்று ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் 27ஆவது ஆண்டு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் ஆசிரியர்கள் மாநாட்டில் (தமிழ்நாடு பிரிவு), இந்திய தொழில்நுட்ப கல்விக் கழக சிறந்த அத்தியாய தலைவர் விருது, இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதாவிற்கும், சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் விருது, இக்கல்லூரியின் மாடர்ன் ஆபீஸ் பிராக்டீஸ் துறையைச் சார்ந்த விரிவுரையாளர் ஆர்.லலிதாவிற்கும், சிறந்த மாணவர் அத்தியாய ஆசிரியர் ஆலோசகர் விருது, முதலாம் ஆண்டு விரிவுரையாளர் எஸ்.மைக்கேல்ராஜ்க்கும், ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்கள். இந்நிகழ்வில் தமிழ்நாடு இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத் தலைவர் டாக்டர் ஏ.சங்கரசுப்ரமணியன் மற்றும் TN ISTE செயலாளர் மற்றும் பொருளாளர் பேராசிரியர் கே.சவுரிராஜன் மற்றும் சு.ஆ.மு.பொறியியல் கல்லூரியின் முதல்வர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், இக்கல்லூரியில்; 22 பேராசிரியர்கள் “Innovative Pedagogies for A Technology – Driven Future” தலைப்பின் கீழ் கட்டுரைகளை வாசித்தளித்தார்கள். விருதுகளை பெற்ற பேராசிரியர்கள் மற்றும் கட்டுரைகளை வாசித்தளித்த பேராசிரியர்களை இக்கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *