இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பு இணைய தளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

viduthalai
1 Min Read

சென்னை, மே 15- சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் 2025-2026 கல்வியாண்டில் இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் நான்காண்டு கால பட்டப்படிப்பிற்கான கீழ்க்கண்ட பிரிவுகளில் மாணவர் சேர்கைக்கு இணைய தளம் வழியாக விண்ணப்பங்கள் 28.04.2025 முதல் பெறப்பட்டு வருகிறது.

  1. இளங்கலை காட்சிக்கலை (ஒளிப்பதிவு) – Bachelor of Visual Arts (Cinematography)
  2. இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) – Bachelor of Visual Arts (Digital Intermediate)
  3. இளங்கலை- காட்சிக்கலை (ஒலிப்பதிவு) – Bachelor of Visual Arts (Audiography)
  4. இளங்கலை காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்) – Bachelor of Visual Arts (Direction and Screenplay writing)
  5. இளங்கலை காட்சிக்கலை (படத்தொகுப்பு) – Bachelor of Visual Arts (Film Editing)
  6. இளங்கலை காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்) – Bachelor of Visual Arts (Animation and Visual Effects)

இளங்கலைக் காட்சிக்கலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க 28.05.2025 கடைசி நாள் என்பதால், கலை ஆர்வம் உள்ள மாணவ/மாணவியர் www.filminstitute.tn.gov.in விருப்பமுள்ள பாடப்பிரிவுகளுக்கு எனும் இணையத்தளத்தில், மாணவர் சேர்க்கைக்கான படிவத்தினை பயனாளர் கையேட்டின் (User Manual) அறிவுத்தலின்படி பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்தி பதிவு செய்தும், அனைத்து உரிய ஆவணங்களுடன் 28.05.2025 மாலை 5.00 மணிக்குள் பதிவேற்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *