‘துக்ளக்’ 21.5.2025
‘பார்ப்பனர்கள் உள்ளம் ஒரு பாழுங்கிணறு என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டுத் தேவையும் உண்டோ!
இந்திய இராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட்ட பேரணியைக் கிண்டல் செய்து ‘துக்ளக்‘ கார்ட்டூன் போடுவது தேசத் துரோகிமில்லையா?
ஒன்றிய பிஜேபி அரசின்மீது கடுமையான கருத்து மோதல் ஒரு பக்கம் இருந்தும், இன்னொரு நாட்டோடு மோதல் என்று வரும் கால கட்டத்தில், அரசியல் மாச்சரியங்களை ஓரங்கட்டி, ஓரணியில் நின்று ஒன்றிய ஆட்சியின் செயல்பாட்டுக்கு ஆதரவுப் பச்சைக் கொடியை உயர்த்துபவர்களைப் பார்த்துக் கேலி செய்வோர்கள் பச்சையான தேசத் துரோகிகள் இல்லையா?
பொதுவாக போர் கூடாது என்று மனிதநேயப் பார்வையில் எழுதிய பேராசிரியர் ஒருவர் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார். ஆனால், இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் குரல்களைக் கிண்டல் செய்கின்ற இவர்களை என்ன செய்வது?
வலுவாக இந்தியாமீது திணிக்கப்பட்ட ஒரு மோதலை எதிர்த்து, இரவு பகல் பாராமல், கண் துஞ்சாமல் போரிடும் இந்திய இராணுவத்துக்கு ஆதரவாக எங்கள் கைகள் ஓங்கும், தோள்கள் துணை நிற்கும் என்ற ஒரு முதலமைச்சர் முன்வந்து பேரணி நடத்துவதை – வரலாறு எல்லாம் காட்டிக் ெகாடுத்தே வயிறு வளர்த்த ஒரு கும்பலின் வாரிசுகள் இப்படி எழுவதில் ஆச்சரியம் இல்லைதான்.
ஆனால் இத்தகையவர்களைப் புரிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பம்.
இதிலும்கூட சிறுபான்மையினர் மீதான துஷ்டப் பார்வை! அப்பட்டமான அரசியல் பார்வை.
தி.மு.க., தி.க. மட்டுமல்ல; (பிஜேபி, அதிமுக உட்பட்ட சில கட்சிகளைத் தவிர) பெரும்பாலும் அனைத்துக் கட்சிகளும் முதலமைச்சர் தலைமையிலான பேரணியில் பங்கேற்ற நிலையில் முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி ஆகியோர் மட்டும் ஆரியத்தின் கண்களை உறுத்துகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
ஆளானபட்ட ஆளுநரே பாராட்டினாலும் இந்தத் ‘துக்ளக்’ அய்யருக்கு மட்டும் பூணூல் துடியாய்த் துடிக்கிறது!
திராவிடர் கழகத் தலைவரோ, தி.மு.க. தலைவரோ இந்திய பாகிஸ்தான் மோதல் குறித்து ஒன்றும் சொல்லாமல் இருந்தால் எப்படியெல்லாம் துள்ளிக் குதித்திருப்பார்கள்!
அல்லும் பகலும் அவர்களின் நினைப்புதான் குருமூர்த்தி ‘துக்ளக்‘ கும்பலுக்கு! திராவிடர் கழகத் தலைவர் வீரமணியிடமிருந்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் விலகி இருக்க வேண்டும் என்று எழுதிப் பார்த்தார் குருமூர்த்திவாள்!
அவரோ அன்றும் சரி, இன்றும் சரி, நாளையும் சரி எங்களுக்கு வழிகாட்டுவது பெரியார் திடல்தான் என்று செவிளில் அறைந்தது போல பதிலடி கொடுத்தார்.
வரலாற்று ரீதியாகப் பார்த்தாலும் மற்றவர்களுக்குக் காட்டிக் கொடுத்து வயிறு கழுவும் கூட்டம் ஒன்று இருக்கிறது.
வரலாற்றில் திருமலை நாயக்கரை அவனது படைத் தளபதியாகவே இருந்து மைசூர் போரில் காட்டிக் கொடுத்த பரம்பரையாயிற்றே! பாகிஸ்தானுக்கு ஒரு பாட்டில் விஸ்கிக்காக இராணுவ ரகசியத்தை கொடுத்த கூமர் நாராயண் வகையறாக்கள் ஆயிற்றே!
இந்தக் கூட்டம் தான், ‘நாட்டுப் பற்று இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் – மோடி எதிர்ப்பு ஓட்டுகளை இழந்து விடவும் கூடாது’ என்ற தர்ம சங்கடத்தில் ஸ்டாலின், வீரமணி மற்றும் ‘இண்டியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இருக்கிறார்களாம்! (இதே ‘துக்ளக்’ இதழில் 13, 14 பக்கங்கள்)
மதப்பற்றுதான் இவாளின் நாட்டுப் பற்று – அந்தக் கண்ணோட்டத்தில் தங்களுக்கு மட்டுமே ‘காப்பிரைட்’ என்று அம்பிகள் குதிக்கிறார்களோ! நேற்றைய தினம் திராவிடர் கழகத் தலைவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே பாகிஸ்தானுக்கு இந்தியா தந்த பாடத்தை குறிப்பிட்டு எழுதியுள்ளாரே!
ஒரு மினி யுத்தம் என்கிற பிரச்சினையில்கூட பார்ப்பனர்கள் நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல், அதை பாரதீய அரசியல் லாபமாக மாற்றத் துடிப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதை முழுமையாகக் கைப்பற்றி ருசிக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் தடுத்து விட்டனர் என்று குருமூர்த்திக் கும்பல் குதிக்கிறது!
இது போன்ற கால கட்டத்தில் வதந்திகளைப் பரப்புவோர் கடுந் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றால் முதலில் இந்தத் ‘துக்ளக்‘மீது அது பாய்ந்திட வேண்டாமா?
இந்தியா – சீன யுத்தம் 1962இல் நடைபெற்றபோது திருவாளர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) இந்திய தரப்பில் ‘இறந்தவர்கள் எத்தனைப் பேர்?’ என்ற கேள்வியை எழுப்பினார். யுத்தக் காலத்தில் பீதியைக் கிளப்பும் அடாத செயல் இது! ஆனாலும் சொல்லுபவர் ஆச்சாரியார் ஆயிற்றே! விழுங்கி முழுங்கத்தானே செய்வார்கள்.
ஆச்சாரியார் அப்படிப்பட்ட கேள்வியை எழுப்பிய நேரத்தில் தந்தை பெரியார் முகத்தில் மொத்தியதுபோல ஒரு பதிலை அளித்தார்.
‘ஏன், செத்தவர்கள் யார் என்று தெரிந்தால் அவர்களின் வீட்டுக்கெல்லாம் சென்று ‘திதி’ என்ற பெயரால் சுரண்டலாம் என்ற நினைப்பா பார்ப்பனர்களுக்கு?’ என்பதுதான் தந்தை பெரியாரின் ‘தடாலடி’யான கேள்வி!
அவ்வளவுதான் ஆச்சாரியார் பக்கத்திலிருந்து ‘கப்–சிப்’ தான்!
குருமூர்த்திகளே, கருப்புச் சட்டையைச் சீண்ட வேண்டாம் – சீண்டினால் உங்கள் தொப்புள் கொடியை அறுத்த கந்தாய கத்திகள் எல்லாம் எங்களிடம் உண்டு!