திராவிடர் கழக இளைஞரணி – மாணவர் கழகத்தினர் எடுத்துக் கொண்ட உறுதிமொழி

viduthalai
1 Min Read

திராவிடர் கழக இளைஞரணி – மாணவர் கழக உறுப்பினராக என்னை நான் இணைத்துக் கொண்டுள்ளேன்.

காரணம்,

  1. மானமும் அறிவும் தான் மனிதர்க்கழகு என்ற அறிவுச் சுதந்திர ஆசான் தந்தை பெரியாரால் தொடங்கப்பட்டு, காலமெல்லாம் எமது கல்வியை மறுத்த மனுதர்மத்தை எதிர்த்து வெற்றிபெற்ற இயக்கம் இது.
  2. ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் படைக்கவும், சமூகநீதி, பாலியல் நீதி ஆகியவற்றை நிலைநாட்டும் கொள்கைப் பாசறையாக இயக்கத்தை உருவாக்கி எதிர்நீச்சல் அடித்து வெற்றி காணும் இயக்கமாம் திராவிடர் கழகத்தின் உருவாக்கமான திராவிட மாணவர் கழகம் இது.
  3. தன்னலம் மறுப்பு, பதவியாசை, அரசியல் வேட்டை முதலிய எந்தவித சபலங்களுக்கும் என்னை ஆளாக்கிக் கொள்ளாமல், சுயமரியாதை, பகுத்தறிவு உணர்வூட்டும் தொண்டறம் மட்டுமே எமது உயிர்மூச்சு என்று கொண்டதால், சபலங்களையும், பேராசைகளையும் விட்டெறிந்து, எஞ்சிய என் வாழ்நாள் முழுவதும் பெரியார் சுயமரியாதைத் தொண்டறத்தைச் செய்யும் வலிமையான கொள்கை வீரராக என்றும் தொடர்வேன்.

இனி, எனது சிந்தனை, செயலாக்கம் எல்லாம் திராவிடர் கழகத்தின் கொள்கை,  லட்சிய வெற்றிக்காக, உறுதியோடு என்னை அர்ப்பணித்துக் கொண்டு, முழு கொள்கை வழிப்பட்ட வாழ்க்கையை மேற்கொள்வேன் என்றும், எக்காரணத்தை முன்னிட்டும், வேறு எந்த சபலத்திற்கும் எப்போதும் ஆளாக மாட்டேனென்றும் உறுதி எடுத்துக் கொள்கிறேன்.

திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக்கூற, திராவிடர் மாணவர் கழக, இளைஞரணி தோழர்கள் தனித்தனியாக தொடுத்து எடுத்துக் கொண்ட உறுதிமொழி இது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *