வடக்குத்து, மே 10- திராவிடர் கழகம் சார்பில் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக கருத்தரங்க கூடத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 135ஆவது பிறந்த நாள் விழா, கிளைக் கழக தலைவர் தங்க பாஸ்கர் தலைமையில் கழகப் பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட துணை தலைவர் மணிவேல், மாவட்ட துணைச் செயலாளர் பஞ்சமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் 29.4.2025 செவ்வாய் மாலை 6:00 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி செயலாளர் டிஜிட்டல் ராமநாதன் வரவேற்புரை ஆற்றினார். கழக சொற்பொழிவாளர் புலவர் சு.ராவணன் உரையாற்றி யதை அடுத்து கழகப் பொதுச் செயலாளர் முனை வர் துரை.சந்திரசேகரன் புரட்சிக் கவிஞரின் பிறந்த நாளை உலகத் தமிழ் நாளாகவும், ஏப்ரல் 29 முதல் மே 5 வரை புரட்சிக் கவிஞர் பிறந்தநாள் விழா வாரமாகவும் தொடர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருக்கக் கூடிய தமிழ் நாடு அரசுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சருக்கும் இதற்கு காரணமான தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பு தீர்மானத்தை முன்மொழிந்தார். தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், “புரட்சிக் கவிஞரை வாசிக்கவும் வாசித்த கருத்துகளை மய்யப்படுத்தி யோசிக்கவும், அதன் மூலமாக மக்களை நேசிக்கவும், தமிழன்பர்கள் முயல வேண்டும்., புரட்சிக் கவிஞரின் தமிழ் இயக்கம் நூல் ஒன்று போதும், அதில் உள்ள பாடல்களை அதனுடைய கருத்துகளை நாம் பின்பற்றினாலே போதும். தமிழ் வாழ, தமிழர் வாழ, திராவிடர் இனம் வாழ நம் நாடு வாழ வாய்ப்பினை ஏற்படுத்தும்.
புரட்சிக் கவிஞரின் 135 வது பிறந்த நாளில் தமிழ் இயக்கத்தில் புரட்சிக் கவிஞர் சுட்டிக்காட்டிய சுரணை மிக்க உணர்ச்சிவரிகளை செயல்படுத்த முயலுவோம். என்று தமது உரையில் கழகப் பொதுச் செய லாளர் முனைவர் துரை சந்திரசேகரன் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் மாநில பகுத்தறிவாளர்கழக அமைப்பாளர் பெரியார் செல்வம், கோபால் சுப்பையா, திராவிட மணி ஓவியா அறிவு பொன்னி, முருகன் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.