சென்னை, மே 9 இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் பயிற்சிமுகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய பிறகு அறிக்கை வெளியிட்டிருந்த முதலமைச்சர் “நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும். ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ராணுவத்திற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடு துணை நிற்கும் என்று உணர்த்த பேரணி குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள சமூகவலைதளப்பதிவில் கூறி யுள்ளதாவது:
பேரணி
தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் நேரம் இது. நாளை மாலை 5 மணிக்கு காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் போர் நினைவுச் சின்னம் வரை, எனது தலைமையில் மேனாள் படைவீரர்கள், அமைச்சர் பெருமக்கள், மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும் இந்த பேரணியில் மக்கள் அனைவரும் பங்கேற்று நம் ஒற்றுமையையும் உறுதியையும் காட்ட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.