நீதிபதி சத்யநாராயணபிரசாத் மறைவுக்கு மரியாதை

1 Min Read

சென்னை, மே9– சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சத்யநாரா யணபிரசாத் 6.5.2025 அன்று இரவு திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் மற்றும் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

சமூகநீதியில் நம்பிக்கையும் பற்றும் கொண்ட நீதிபதி சத்யநாராயண பிரசாத் எளிய மக்களுக்கான நீதி பதியாகத் திகழ்ந்தார். அவரது  மறைவிற்கு திராவிடர்கழகத்தின் சார்பாக, வழக்குரைஞ ரணித் தலைவர் வழக்குரைஞர் வீரசேக ரன், பிரச்சாரச் செய லாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த் தினி, வடசென்னை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாநில மகளிர் பாசறைச் செயலாளர் வழக்குரைஞர்  மணியம்மை,  வழக்குரை ஞர் துரை அருண்,  வழக்குரைஞர் வேலவன் ஆகியோர் நேரில் சென்று மரியாதை செலுத்தி, மறைந்த நீதிபதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். 7.5.2025 அன்று மாலை அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *