சென்னை, மே 8- பயங்கரவாதத் திற்கு எதிரான போரில் நமது நாட்டுக்காக, தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
காஷ்மீர் பஹல்காம் என்ற இடத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீதும், உள்ளூர் மக்கள் மீதும் பயங்கரவாதி கள் நடத்திய தாக்குதல் பெரும் அதிர்வலையை ஏற்ப டுத்தியது. இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடவடிக் கையை மேற்கொண்டனர்.
அதன்படி, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பதுங்கு குழிகள், இருப்பிடங்களை துல்லியமாக கண்டறிந்து அழித்தெடுக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள் ளனர். நாடு முழுவதிலும் இருந்து பிரதமர் மோடிக்கும், ராணுவ நடவடிக்கைக்கும் ஆதரவுகள் குவிந்து வருகிறது.
உறுதியாக நிற்கிறது
ராணுவத்தின் அதிரடி நட வடிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ராணுவத்துடன் தமிழ்நாடு நிற்கிறது என்று சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பக்கத்தில் கூறி யிருப்பதாவது:-
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தமிழ்நாடு இந்திய ராணுவத்துடன் நிற்கிறது. நமது ராணுவத்தினருடன், நமது நாட்டுக்காக தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.