மக்கள் உயிர் மீது பிரதமருக்கு அக்கறை இல்லை: கார்கே
காஷ்மீரில் தாக்குதல் நடக்கப்போவதாக பிரதமர் மோடிக்கு 3 நாட்களுக்கு முன்பே புலனாய்வுத்துறை தகவல் கொடுத்துவிட்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இதனால் காஷ்மீர் பயணத்தை ரத்து செய்த மோடி, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை ஏன் உறுதி செய்யவில்லை என கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். புலனாய்வுத்துறையின் தகவலை பாதுகாப்பு படைகளிடம் பகிரவில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.
சிங்கப்பூர் ஆளுங்கட்சியில்
6 தமிழர்கள்!
சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ள மக்கள் செயல் கட்சி(பிஏபி) சார்பில் 6 தமிழர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளனர். சிங்கப்பூரில் தனி உறுப்பினர், குழு பிரதிநிதித்துவ தொகுதி (GRC) என 2 வகை தொகுதிகள் உள்ளன. அனைத்து இனத்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுப்பதற்காக GRC நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், GRC முறையில் வெற்றிபெற்ற Dr. ஹமீது ரசாக்கின் முன்னோர் கடையநல்லூரை சேர்ந்தவர்களாம்.
அ.தி.மு.க. கூட்டணி சரிவை சந்திக்கும்: திருமாவளவன்
அதிமுக – பா.ஜ.க. கூட்டணி சரிவை சந்திக்குமே தவிர வளராது என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். இந்த கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்ற மாயையை உருவாக்குவதாகவும், அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி 2001ஆம் ஆண்டிலேயே உருவானதாகவும், அப்போதே மக்கள் படிப்பினையை கொடுத்துள்ளார்கள் என்றும் திருமாவளவன் காட்டமாக தெரிவித்தார்.
செய்திச் சுருக்கம்
Leave a Comment