இஸ்ரோவில் பொறியாளர்களுக்கு பணி

2 Min Read

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) காலியாக உள்ள முக்கிய பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட தொடங்கியுள்ளது. இஸ்ரோவில் 63 விஞ்ஞானி/ இன்ஜினியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

பணியின் விவரங்கள்: விஞ்ஞானி/ இன்ஜினியர் ‘SC’(Electronic) – 22. விஞ்ஞானி/ இன்ஜினியர் ‘SC’ (Mechanical) – 33. விஞ்ஞானி/ இன்ஜினியர் ‘SC’ (Computer Science) – 8. மொத்தம் – 63

வயது வரம்பு: இஸ்ரோவில் உள்ள விஞ்ஞானி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 19.05.2025 தேதியின் அடிப்படையில் குறைந்தபட்சம் 28 வயது இருக்க வேண்டும். அரசு பணியாளர்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் விதிமுறைகளின் அடிப்படையில் வயது வரம்பில் தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி: இஸ்ரோவில் உள்ள விஞ்ஞானி பணியிடங்களுக்கு எலெக்ட்ரிக்கல் & தகவல் தொடர்பியல் பொறியியல், மெக்கானிக்கல் பொறியியல், கணினி அறிவியல் பொறியியல் ஆகியவற்றில் BE/B.Tech அல்லது அதற்கு நிகரான கல்வியை குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், விண்ணப்பதார்கள் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் கேட் தேர்வை எழுதி இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: இஸ்ரோ விஞ்ஞானி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை 10 கீழ் ஊதியம் வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு அடிப்படையில் ரூ.56,100 சம்பளமாக வழங்கப்படும். மேலும் அகவிலைப்படி, கொடுப்பனைகள் உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இஸ்ரோ விஞ்ஞானி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் கல்வித்தகுதி மற்றும் கேட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். 100 மதிப்பெண்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். அதில் குறைந்தபட்சம் தேர்ச்சிக்கு 60 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.isro.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி பிரிவினர், எஸ்டி பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.05.2025

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *