திருச்சி- பிச்சாண்டார் கோவில், நெம்பர் 1 டோல்கேட் பகுதி தலைவர் போஸ்டல் ராமசாமி (வயது 93) வயது மூப்பின் காரணமாக நேற்று (06.05.2025) மாலை 3 மணியளவில் மறைவுற்றார்.
அவருக்கு மாவட்ட , ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர். வாழ்விணையர் கோமதியம்மாள், மகன்கள்: கரிகாலன், ராஜன், செல்வராஜ், கென்னடி, மகள்கள்: அமுதா, வாசுகி ஆகியோரைக் கொண்ட இவர்களது குடும்பமே பெரியாரின் கொள்கைக் குடும்பம் ஆகும்.
போஸ்டல் ராமசாமி அஞ்சல் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.
இன்று (07.05.2025) மாலை 3 மணியளவில்
கி.ஆ.பெ.விசுவநாதன் மருத்துவ கல்லூரிக்கு அவரது உடல் கொடையாக வழங்கப்பட்டது.
தொடர்புக்கு: இளைய மகன் செல்வராஜ், 98656 22152