புரட்சிக் கவிஞர் பிறந்தநாள் விழா
புதுச்சேரி, மே7- புதுச்சேரியில் பகுத்தறிவா ளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் ஆகியவை இணைந்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 135ஆவது பிறந்தநாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக பாவேந்தரும் இந்தி திணிப் பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
27-04-2025 ஞாயிற் றுக்கிழமை மாலை 6:00 மணியளவில் புதுச்சேரி இராசா நகர், பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு பகுத் தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் துணைப்பொதுச் செயலாளர் வி.இளவரசி சங்கர் தலைமை ஏற்றார், பகுத்தறிவாளர் கழகத் தோழியர் ஜெ.வாசுகி அனை வரையும் வரவேற்றார்.
புதுச்சேரி மாவட்ட கழகத் தலைவர் வே.அன்பரசன், விருத் தாச்சலம் மாவட்டத் தலைவர் த.சீ.இளந்தி ரையன், புதுச்சேரி மாவட்டச் செயலாளர் தி. இராசா, பகுத்தறிவுக் கலைத் துறையின் புதுவைத் தலைவர் புதுவை.பிரபா ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
புரட்சிக்கவிஞர் படத்தினைத் திறந்து வைத்து புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி தொடக்கவுரை ஆற்றினார்.
சமூக நீதிப் போராளி, தனித் தமிழ்ப் பற்றாளர் ந.மு.தமிழ்மணிக்கு அளிக் கப்பட்ட பாவேந்தரும் இந்தி திணிப்பும் என்ற தலைப்பில் உரை நிகழ்த் தினார்.
எல்லாருக்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்த வையம் என்ற பாவேந் தரின் பொது நோக்கு சிந்தனை தொடங்கி, புரட்சிக் கவிஞருக்கும் சுப்பிரமணியப் பாரதிக்கும் உள்ள வேறுபாடு பற்றி யும், இந்தித் திணிப்பு என்ற போர்வையில் சமசுகிருத் திணிப்புக்கு அடிகோலப்பட்டுள்ள நாட்டு நடப்புகள் பற்றியும், ஒன்றிய அரசு சமசுக்கிருத மொழிக்கு ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளத் தொகைகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறி உரையாற்றினார்.பார்வையாளர்களின் கேள்விகளுக்கு விடை யளித்தார்.
நிறைவாக விடுதலை வாசகர் வட்டச் செயலா ளர் ஆ.சிவராசன் நன்றி கூறினார்