ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது வாடிக்கையாகிவிட்டதாக அமலாக்கத் துறையை உச்சநீதிமன்றம் (SC) காட்டமாக விமர்சித்துள்ளது. சத்தீஸ்கரில் 2019-2022 வரையிலான பூபேஷ் பாகல் ஆட்சியில் ரூ.2,000 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.ஓகா, குற்றம் சுமத்தப்பட்டவர் ரூ.40 கோடி சம்பாதித்ததற்கான ஆதாரம் எங்கே என அமலாக்கத் துறைக்கு (ED) கேள்வியெழுப்பியுள்ளது.