வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு 15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

2 Min Read

புதுடில்லி, மே 7– வக்ஃபு திருத்த சட்டத் துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது. அடுத்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தும்.

வக்ஃபு சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இருஅவை களிலும் நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதலுடன் சட்டம் ஆனது.

அந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, இடதுசாரி கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என
70-க்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால், கடந்த மாதம்
17-ஆம் தேதி நடந்த விசாரணை யின் போது, 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக உச்சநீதிமன்றம் கூறியது. மே 5-ஆம் தேதி, இடைக் கால உத்தரவு பிறப் பிப்பதாகவும் தெரிவித்தது. அது வரை, வக்ஃபு வாரியங்களில் புதிய நியமனங்களை செய்ய மாட்டோம் என்று ஒன்றிய அரசு உறுதி அளித்தது.

ஒன்றிய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.

தலைமை நீதிபதி ஓய்வு

இந்நிலையில்,  உச்சநீதிமன்றத் தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (5.5.2025) இம்மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, தான் 13-ஆம் தேதி ஓய்வு பெறுவதால், அடுத்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரிக்கும் என்று அறிவித்தார்.

அவர் கூறியதாவது:- ஒன்றிய அரசின் பதில் மனுவை நாங்கள் ஆழ்ந்து படிக்கவில்லை. வக்ஃபு சொத்துகள் பதிவு குறித்த சில கருத்துகளை ஒன்றிய அரசு எழுப்பி உள்ளது. சில சர்ச்சைக்குரிய புள்ளி விவரங் களை அளித்துள்ளது. அவற்றை பரிசீலிக்க சிறிது காலம் தேவைப்படும்.

15-ஆம் தேதி விசாரணை

நான் இந்த இடைக்காலத்தில் தீர்ப்பை ஒத்திவைக்க விரும்ப வில்லை. விரைவில் இவ்விவ காரம் விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் எனது அமர்வில் அல்ல.

தலைமை நீதிபதியாக நியமிக் கப்பட்டுள்ள நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில், மே 15-ஆம் தேதி இம்மனுக்கள் விசாரணைக்குவரும். இவ்வாறு அவர் கூறினார்.

சொலிசிட்டர் ஜெனரல்

அதற்கு ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நீங்கள் விசாரிப்பதை விரும்புகிறோம் ஆனால், நேர மின்மை காரணமாக உங்களை தர்மசங்கடப்படுத்த விரும்ப வில்லை. உங்கள் ஓய்வை பற்றி நினைவுபடுத்துவது வேத னையாக இருக்கிறது” என்று கூறினார். அதற்கு தலைமை நீதிபதி, “இல்லை. நான் ஓய்வை எதிர்கொள்ள தயாராக இருக் கிறேன்” என்று தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *