கொல்கத்தா, மே 6- வக்ஃபு சட்டத்துக்கு எதிரான கலவரத்தில் 3 பேர் பலியான முர்சிதாபாத் மாவட் டத்துக்கு சென்று, முதல் முறை யாக கலவரப் பகுதிகளை மம்தா பார்வையிட்டார். வகுப்பு வாத கிருமிகளை பரப்புவதாக பா.ஜன தாவை அவர் குற்றம் சாட்டினார்.
பா.ஜனதா தூண்டுதல்
மேற்கு வங்காள மாநிலம் முர்சி தாபாத் மாவட்டத்தில் கடந்த மாதம் வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிராக கலவரம் வெடித்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். சுமார் ஒரு மாதம் கடந்த நிலையில், முர்சிதாபாத் மாவட்டத்துக்கு மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று சென்றார்.கலவர பகுதிகளை முதல் முறையாக பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- முர்சிதாபாத் கலவரத் தில் சம்பந்தப்பட்டவர்களை பா.ஜனதா பாதுகாக்கிறது. சில வெளி நபர்களும், மத தலைவர்களும் வன்முறையை தூண்டிவிடுகிறார்கள். மிகக்கொடுமையான வகுப்புவாத கிருமிகளை (வைரஸ்) பா.ஜனதா பரப்பி வருகிறது.
திட்டமிட்ட கலவரம்
பாதிக்கப்பட்ட சில குடும்பங் களை நான் சந்திக்க விடாமல், அக் குடும்பங்களை பா.ஜனதா கடத்திச் சென்று விட்டது. வகுப்பு கலவரத்தை ஊக்குவிப்பதற்கு பதிலாக, எல்லைகளை ஒன்றிய அரசு பாதுகாக்க வேண்டும். பஹல்காம் தாக்குதலில் பலியானோரின் குடும்பங்களுக்கு நீதி வழங்க வேண்டும். கேவலமான அரசியலில் ஈடுபடக்கூடாது. தேசிய மனித உரிமை ஆணைய குழு ஏன் மணிப் பூர் செல்லவில்லை?மேற்கு வங்காளத் துக்கு மட்டும் ஏன் விரைவாக வரு கிறது?. இதில் இருந்தே இது திட்ட மிட்ட கலவரம் என்று தெளிவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்