டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நீதிபதியின் வீட்டின் முன் பண மூட்டைகள் கைப்பற்றப்பட்ட விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்.
* பாகிஸ்தானுடன் போருக்கு தயாராகும் இந்தியா. நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை: எதிரி நாட்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்களுக்கு பயிற்சி; அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு உத்தரவு.
* வக்ஃபு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை வரும் மே 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், இதுவரை மசோதாவிற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடரும் என்று தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து சஞ்சய் கன்னா ஓய்வு பெற இருப்பதால், அடுத்த தலைமை நீதிபதியான கவாயின் அமர்வுக்கு இந்த வழக்கை அவர் மாற்றினார்.
* எந்தவித ஆதாரமும் இல்லாமல், அமலாக்கத் துறை குற்றச்சாட்டை மேற்கொள்கிறது. பல வழக்குகளிலும் இதே நிலை தொடர்வதாக உச்ச நீதிமன்றம் குட்டு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* எஸ்.சி. உட்பிரிவுகளுக்கு உள் ஒதுக்கீடு: கருநாடகாவின் கணக்கெடுப்பு முயற்சி. கணக் கெடுப்பின் இரண்டாம் கட்டம் மே 19 முதல் 21 வரை நடைபெறும். முதல் கட்டத்தில் விடுபட்ட வர்களை கணக்கெடுப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மூன்றாம் கட்டமாக, மே 19 முதல் 23 வரை இணையவழி கணக்கெடுப்பு முறை செயல்படுத்தப்படும் என அறிவிப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மோடி-ராகுல்-தலைமை நீதிபதி சந்திப்பில் ஒருமித்த கருத்து இல்லை, சிபிஅய் இயக்குநர் பிரவீன் சூட் பதவிக்காலம் ஒரு ஆண்டு நீட்டிக்கப்படுகிறது.
தி இந்து:
* வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை தோற்கடிக்க மகாகத்பந்தனுக்கு (எதிர்க் கட்சிகளின் மகா கூட்டணி) ஒரு உத்தியை வகுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
* ஜாதி வாரி கணக்கெடுப்புடன் கூடிய வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, இன்னமும் உரிய வாய்ப்பு கிடைக்காத பின்தங்கிய சமூகங்களை சேர்ப்பதற்கான வாய்ப்பை உருவாக்கக்கூடும் என கட்டுரையாளர்கள் ராம சங்கர் சிங், சர்தக் பாக்சி கருத்து.
தி டெலிகிராப்:
* மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை என்பது நாட்டின் சமூக, மற்றும் பொருளாதார தரவுகளை சேகரித்தல், தொகுத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. தரவைப் பகிர்வதை எளிதாக்கு வதற்கு முன் சட்டத்தில் பொருத்தமான திருத்தங் களை வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
– குடந்தை கருணா