புதுடில்லி, மே 6- டில்லியில் நடைபெற்ற என்.சி.இ.ஆர்.டி. (NCERT) கவுன்சில் கூட்டத்தில், பி.எம்.சிறீ திட்டம் மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு அரசு அதிகாரிகள், ஒன்றிய அரசின் பி.எம்.சிறீ திட்டம் மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை ஹிந்துத்துவா கொள்கையாக உள்ளது என்றும் சமஸ்கிருதம், ஹிந்தியை திணிப்பதற்கு தான் ஒன்றிய அரசு முயற்சி செய்து வருவதாகவும் தமிழ்நாடு அரசு எதிர்ப்பை பதிவு செய்தது.