புதுடில்லி, மே 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலங்கள வைக்குழு தலைவராக இருந்தவர் பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா. இவர் அந்த பதவியில் இருந்து விலகி உள்ளார். எனவே துணைத் தலைவராக இருந்த ஜான் பிரிட்டாஸ் நாடாளுமன்ற உறுப்பினரை கட்சியின் மாநிலங் களவைக்குழு தலைவராக மேலி டம் நியமித்து உள்ளது. கேரளாவை சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினரான ஜான் பிரிட்டாஸ், நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதங்களில் ஆவே சமாக கருத்துகளை பதிவு செய்யக்கூடியவர். இந்தியா கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஒன்றிய அரசை சரமாரியாக கேள்வி எழுப்பி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். அவர் மாநிலங்க ளவைக்குழு தலைவராக நிய மித்து இருப்பதை கட்சியினர் வரவேற்று உள்ளனர். தற்போது அவர் வெளியுறவுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு உள்பட பல்வேறு குழுக்களில் அங்கம் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.