சென்னை, மே5- வக்ஃபு திருத்தச் சட் டத்துக்கு எதிராக விசிக நடத்தவுள்ள பேரணி தொடர்பாக மே 9ஆம் தேதி முதல் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆலோசனை நடத்தவுள் ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
இதுதொடர்பாக முகநூல் நேரலையில் திருமாவளவன் பேசிய தாவது: வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிராக விசிக சார்பில் மே 31ஆம் தேதி திருச்சியில் பேரணி நடைபெறவுள்ளது. இதையொட்டி, மே 8ஆம் தேதி சேலம், மே 9ஆம் தேதி சென்னை, மே 10ஆம் தேதி வேலூர், மே 12ஆம் தேதி மதுரை, மே 13ஆம் தேதி திருச்சி ஆகிய இடங்களில் பொறுப்பாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவிருக்கிறேன். மதச்சார்பின்மை காப்போம் என்ற பெயரில் பேரணியை நடத்த இருக்கிறோம். தேர்தல் நெருங்கும் சூழலில் இந்தப் பேரணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தேசம் காப்போம் என்ற பெயரில் திருச்சியில் பேரணி நடத்தினோம்.
இந்நிலையில் விசிகவின் பேரணி மதச்சார்பின்மைக்கு ஆபத்து இருக்கிறது என்பதற்கான விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் அறப்போராக அமையும். மதச்சார்பின்மை குறித்து நாம் எழுப்பும் கேள்விகள் தமிழ்நாடு தேர்தல் அரசியலின் திசையை தீர்மானிக்கக் கூடியதாக அமையும். எத்தனை பேர் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், அணி களை உருவாக்க லாம். எத்தனை பேரும் அணிகளுக்கு தலைமை தாங்கலாம். யாரும் முதலமைச்சர் கனவுகளோடு வலம் வரலாம். ஆனால் ஒட்டுமொத்தத்தில் தேர்தல் களம் என்பது கருத்தியல் யுத்தமாக மாற வேண்டும். அங்கு மதச்சார்பின்மைக்கு ஆதரவான அணி, எதிரான அணி என்ற தொடக்கத்தின் புள்ளியாக விசிகவின் பேரணி அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.