சென்னை, மே 5- வடசென்னை மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம் 24.4.2025 அன்று பெரம்பூர் பழனி ஆண்டவர் கோவில் தெருவில் சிறப்பாக நடை பெற்றது.
மாவட்ட மாணவர் கழக செயலாளர் அ.புக ழேந்தி வரவேற்றுப் பேசி னார். தலைவர் ச.சஞ்சய் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துப் பேசினார். மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ந.கார்த்திக் தொடக்கவுரையாற்றினார்.
மாநில திராவிட மகளிர் பாசறை செயலா ளர் வழக்குரைஞர் பா. மணியம்மை, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும் பொன், பொதுக்குழு உறுப்பினர் தங்க.தனலட் சுமி, வடசென்னை மாவட்ட கழக காப்பாளர் கி.இராமலிங்கம், துணைத் தலைவர் நா.பார்த்திபன், துணை செயலாளர் வ.தமிழ்ச் செல்வன், பெரம்பூர் து.தியாகராசன், மாவட்ட இளைஞரணி தலைவர் வ.கலைச்செல்வன், துணை செயலாளர் த.பரிதின், துணைத் தலைவர் பா.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேசு, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம், சட்டக்கல்லூரி மாண வர் ம.பூவரசன், வே. சாரல்இன்பன், தி.மு.க. வட்ட செயலாளர் த.ஆறுமுகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்புச் செயலாளர் பொ.தமிழினியன், பெரம்பூர் தெற்கு பகுதி தி.மு.க. செயலாளர் க.ஜெயராமன், மாமன்ற உறுப்பினர் சர்ப ஜெயதாஸ் ஆகியோர் உரையாற்றினார்.
சிறப்புமிகுந்த இக்கூட் டத்தில் திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வி.சி.க. துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், தி.மு.க. செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பொதுக்கூட்ட மேடைக்கு மறைவுற்ற பெரியார் பெருந்தொண்டர் ஏ.தணிகாசலம் பெயர் சூட்டப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் அவரது உருவப் படத்தினை கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் திறந்து வைத்தார். வடசென்னை மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் த.மரகதமணி மற்றும் குடும்பத்தினர் அப்போது உடனிருந்தனர்.
ச.பிரின்சு என்னாரெசு பெரியார், ஆளூர் ஷாநவாஸ், தமிழன் பிரசன்னா ஆகியோர் பயனாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர்.
கூட்டத்தின் தொடக் கத்தில் கழக கொள்கை வழிப் பாடல்களைப் பாடி இசை நிகழ்ச்சியை சிறந்த முறையில் நடத்திய அறிவுமானனுக்கு வடசென்னை மாவட்ட மாணவர் கழக சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கழகத் தோழர்களும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு கழகக் கருத்து களை ஆர்வத்தோடு செவி மடுத்தனர். நிறைவாக நித் தியகுமார் நன்றி கூறினார்.