கோபி மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் மு.சென்னியப்பன் தலைமையில்
தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து தோழர்கள் வரவேற்றனர்.
பொள்ளாச்சி மாவட்ட கழகத்தின் சார்பில் மூத்த பெரியார் பெருந்தொண்டர் பொறியாளர் பொள்ளாச்சி பரமசிவன் தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
மேட்டுப்பாளையம் மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமையில் தமிழர் தலைவர் ஆசிரியரைச் சந்தித்தனர்.
திருப்பூர் மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் யாழ்.ஆறுச்சாமி, பல்லடம் இளங்கோ, நாச்சிமுத்து மற்றும்
கழக பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்.