கல்விக் கட்டண உயர்வு

1 Min Read

தனியாா் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்!

சென்னை, மே 5- அடுத்த மூன்று கல்வியாண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை உயா்த்த விரும்பும் தனியாா் பள்ளிகள் அதற்காக மே 15 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தனியாா் பள்ளிகள் இயக்குநரகத்தின் கீழ் 12 ஆயிரத்துக்கும் அதிகமான தனியாா் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கான கல்விக் கட்டணத்தை முறைப்படுத்துவதற்காக, உயா்நீதிமன்ற உத்தரவின்படி பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கல்விக் கட்டண நிா்ணயக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆா்.பாலசுப்ரமணியன் தற்போது பதவியில் இருக்கிறாா். இக்குழு சாா்பில் தனியாா் பள்ளிகளில் இருக்கும் கட்டமைப்பு வசதிகள் அடிப்படையில், கல்விக் கட்டணம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிா்ணயிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, அடுத்து வரவுள்ள 2025-2026, 2026-2027, 2027-2028 ஆகிய 3 கல்வியாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் நிா்ணயம் செய்யப்படவுள்ளன. இதற்கான பரிந்துரை விண்ணப்பங்களை பல்வேறு தனியாா் பள்ளிகள் அனுப்பி வருகின்றன.

அந்த வகையில், இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 15-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. கல்விக் கட்டணத்தை உயா்த்த விரும்பும் பள்ளிகள் மட்டும் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதேநேரம் கட்டண உயா்வு தேவைப்படாத பள்ளிகள் விண்ணப்பத்தை சமா்ப்பிக்க வேண்டாம். மேலும், பள்ளிகள் விண்ணப்பிக்கும்போது மாணவா் ஆசிரியா் எண்ணிக்கை, ஊழியா்களின் ஊதியம், கடந்த கல்வியாண்டுக்கான வரவு-செலவு அறிக்கை உள்பட விவரங்களை தணிக்கை துறையிடமிருந்து பெற்று உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும்.

கட்டணம் நிா்ணயம் செய்யப் பட்டவுடன் இந்தத் தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். அதை ஒப்பிட்டு பள்ளிகள் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாக பெற்றோா்களுக்கு சந்தேகம் எழுந்தால் நேரடியாக இந்தக் குழுவிடம் புகாா் செய்யலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *