மல்லிகார்ஜுன் கார்கே குற்றச்சாட்டு
புதுடில்லி, மே 5 மணிப்பூரில் கலவரம் வெடித்த மே 2023 முதல், பிரதமர் நரேந்திர மோடி 44 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம்சாட்டியுள்ளார். மணிப்பூரில் கலவரம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி இன்னும் மணிப் பூருக்குச் செல்லாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மோடி 44 முறை வெளிநாடு பயணம்
“கடந்த இரண்டு ஆண்டுகளாக மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப் பட்டுள்ளது. அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்புவதற்காக மணிப்பூர் மக்கள் பிரதமரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆனால், ஜனவரி 2022-இல் மணிப்பூரில் உங்களின் கடைசி தேர்தல் பேரணிக்குப் பிறகு, நீங்கள் 44 வெளிநாட்டுப் பய ணங்களையும், 250 உள்நாட்டுப் பயணங் களையும் மேற்கொண் டுள்ளீர்கள். ஆனாலும், மணிப்பூரில் ஒரு நொடிகூட நீங்கள் செலவிடவில்லை. மணிப்பூர் மக்கள் மீது ஏன் இந்த அலட்சி யமும் புறக்கணிப்பும்?” என்று கார்கே சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மணிப்பூரில் இரட்டை எஞ்சின் அரசாங்கம் (மாநிலத்திலும் மத்தியிலும் பாஜக ஆட்சி) இருந்தும் வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும், முதலமைச்சரை ஏன் முன்பே நீக்கவில்லை என்றும் அவர் சாடியுள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அறிவித்த அமைதிக்குழுவுக்கு என்ன ஆனது என்றும், பாதிக்கப்பட்ட அனைத்து சமூக மக்களையும் பிரதமர் டில்லி யில் கூட சந்திக்காதது ஏன் என்றும் கார்கே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மணிப் பூருக்கு ஒரு சிறப்பு நிவா ரணத் தொகுப்பை ஏன் அறிவிக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மீண்டும் ஒரு முறை தனது கடமையைச் செய்யத் தவறி விட்டார்” என்று மல்லிகார்ஜுன் கார்கே தனது அறிக்கையில் கடுமை யாக விமர்சித்துள்ளார்.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகும் வன் முறைச் சம்பவங்கள் நிற்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.