முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (5.5.2025) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் ‘‘தமிழ் வார’’ நிறைவு விழாவில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், ஆ, பழநி ஆகியோரின் நூல்களை நாட்டுடைமை செய்து, அவர்களின் மரபுரிமையினருக்கும், கொமா. கோதண்டம் மற்றும் புலவர் இலமா தமிழ்நாவன் ஆகியோரின் நூல்களை நாட்டுடைமை செய்து அவர்களுக்கும் நூலுரிமைத் தொகையாக தலா 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார். இந்நிகழ்வின்போது நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் மு. மகேஷ்குமார், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் மணிவாசன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்தியநாதன், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) கவிதா ராமு, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந. அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.