சென்னை, மே.4- ‘மாநில சுயாட்சி நாயகர்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கல்வியாளர்கள் புகழ்ந்து பேசினார்கள்.
பாராட்டு விழா
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை மற்றும் கல்வியாளர்கள் சார்பில் மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று (3.5.2025) மாலை பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விழாவுக்கு பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தரும், திராவிடர் கழகத் தின் தலைவருமான கி.வீர மணி தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் முன்னிலை வகித்தார். சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப் பின் தலைவரும், ஆர்.எம்.கே கல்வி குழுமத்தின் நிறுவன தலைவருமான ஆர்.எஸ்.முனி ரத்தினம் வரவேற்று பேசினார்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரையாற்றினார்.
கல்வியாளர்கள் வாழ்த்துரை
வேலூர் வி.அய்.டி.பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஜி.விஸ்வநாதன், பாரத் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி.,எஸ்.அய்.இ.டி. கல்வி குழுமத்தின் ஆலோசகர் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி,லயோலா மேலாண்மை கல்லூரி இயக்குநர் சொ.ஜோ.அருண், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் கே.நாராயணசாமி, மதுரை தியாகராசர் கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஹரி கே.தியாகராஜன், கோவை ஜி.ஆர்.ஜி. கல்வி குழுமத்தின் நிறுவனர் ஆர்.நந்தினி ரங்க சாமி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜி.ரவி, வேலூர் திரு வள்ளுவர் பல்கலைக்கழகத் தின் துணைவேந்தர் டி.ஆறு முகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்தி ரன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் மன்னர் ஜவகர், சென்னை பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் ஜி.திருவாச கம்,கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவி தனலட்சுமி, சென்னை ராணி மேரி கல்லூரி மாணவி அபிது நிஷா, கோவை கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் எஸ்.நிஷோக் நாராயணன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி பேசினார்கள். ‘மாநில சுயாட்சி நாயகர்’ என்ற அடைமொழியுடன் வாழ்த்தியும் பேசினார்கள். குமாரபாளையம் ‘எக்செல்’ கல்விக்குழுமத்தின் தலைவர் ஏ.கே.நடேசன் நன்றி கூறினார்.
அமைச்சர்கள் பங்கேற்பு
விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, மேயர் ஆர்.பிரியா, தமிழ்நாடு காங்கி ரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூ னிஸ்டு கட்சி மாநில செயலா ளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், திருவண்ணாமலை அருணை கல்வி குழுமத்தின் துணை தலைவர் எ.வ.குமரன், சிவானி கல்வி குழுமத்தின் தலைவர் பி.செல்வராஜ், ஜெயா கல்வி குழுமத்தின் நிறுவனர் கனகராஜ், கோவை சிறீ கிருஷ்ணா கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.மலர்விழி, கோவை என்ஜினீயரிங் கல்லூரிகள் சங்கத்தின் பொருளாளர் பா.மகேந்திரன், மாதா கல்வி குழுமத்தின் தலைவர் எஸ்.பீட்டர், ஆர். எம்.கே. கல்வி குழுமத்தின் துணை தலைவர் ஆர்.எம். கிஷோர், சென்னை ‘இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’ தலைவர் பி.சிறீராம்,சாய்ராம் கல்வி குழுமத்தின் தலைவர் சாய்பிரகாஷ் லியோமுத்து ஆகிய விழாக்குழுவை சேர்ந்த கல்வியாளர்களும், திரளான மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.
விழாவில் கலைநிகழ்ச்சிகள் மூலமாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவ-மாணவிகள் பாராட்டுகளை வெளிப்படுத்தினார்கள். விழா குழு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவரது உருவப்படத்துடன் மாநில சுயாட்சி நாயகர் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கேடயம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. விழாவுக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் ஆட்டம்-பாட்டம், கொண்டாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.