காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தோழர்கள்
கலந்துரையாடலில் தீர்மானம்
காஞ்சிபுரம், மே 4– காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்து ரையாடல் கூட்டத்தில் பெரியாரியல் பயிற்சி வகுப்பை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்ததோடு, தமிழ்நாட்டு முதலமைச்சருக்கும், தமிழர் தலைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 29.4.2025 அன்று மாலை 7.30 மணியளவில், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள அபிராமி விடுதி அரங்கத்தில், மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி தலைமையில் நடை பெற்றது.
மாவட்ட காப்பாளர் டி.ஏ.ஜி அசோகன், ச. வேலாயுதம், மாவட்ட கழகச் செயலாளர் கி. இளையவேள், பெரியார் பெருந்தொண்டர் போளூர் பன்னீர்செல்வம், அறிவு வளர்ச்சி மன்ற நிறுவனர் நாத்திகம் நாகராசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பா. இளம்பருதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் அ.வெ. சிறீதர், மாவட்ட கழக இளைஞரணி தலைவர் வீ. கோவிந்தராஜி, செய லாளர் அருண்குமார், பகுத்தறிப்பாளர் கழகத் தோழர் பல்லவர்மேடு சேகர், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் முனைவர் பா.கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் பு. எல்லப்பன், கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
கலந்துரையாடல் கூட்டத்தில், “காலனி என்ற சொல்லை ஆவணங்களிலும் பொது வெளியிலும் இனி பயன்படுத்தக்கூடாது” என்ற அறிவிப்பை வெளியிட்டமைக்கும் ‘புரட்சிக் கவிஞர் பிறந்த நாளையொட்டி ஒருவாரம் தமிழ் வார விழாவாகக் கொண்டாடப்படும்’ என்றும் அறித்த சமூக நீதிக்கான சரித்திர நாயகர், தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்தும், மே 18 ஞாயிற்றுக்கிழமை அன்று காஞ்சிபுரத்தில் பெரியாரியல் பயிற்சி வகுப்பை நடத்த வாய்ப் பளித்த திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் பயிற்சி வகுப்பை சிறப்பாக நடத்த தீவிரமாக ஏற் பாடுகளைச் செய்வது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன