தேவக்கோட்டையில் அண்ணல் அம்பேத்கர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

viduthalai
2 Min Read

தேவகோட்டை, மே 4- தேவ கோட்டையில் சட்டமேதை அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா! மே தின விழா, திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிக்கு பாராட்டு விழா  1.5.2025 மாலைஆறுமணிக்கு இராம்நகரில் மாவட்டத்தலைவர் ம.கு.வைகறை தலைமையில் எழுச்சி யோடு நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி வரவேற்புரையாற் றினார். நகரத்தலைவர் வீ.முருகப்பன், நகரசெயலாளர் ந.பாரதிதாசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச்செயலாளர் இ.ப.பழனிவேல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதைகளை வாசித்தார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தனது நோக்கவுரையில் தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம்  திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை பரப்புரை மேற் கொள்வதன் நோக்கத்தையும், ஆட்சிக்கு எதிரான தடைக் கற்களை யும் விளக்கினார்.

கழகசொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா தொடக்க வுரையாற்றினார்.

அண்ணல் அம்பேத்கர் படத்தை திறந்து வைத்து கழககாப் பாளர் சாமி.திராவிடமணி அவர்களும், புரட்சிக்கவிஞர் படத்தினை திறந்து வைத்து மாவட்ட துணைத்தலைவர் கொ.மணிவண்ணன் அவர்களும் கருத்துரைவழங்கினார்கள். நகர திமுக செயலாளர் பெரி.பாலமுருகன் பங்கேற்று திராவிடர் கழகத்தின் அரும்பெரும் பணிகளை பாராட்டி உரையாற்றினார்.

நிறைவாக வழக்குரைஞர் பூவை.புலிகேசி அறிவாசான் தந்தை பெரியாரின் கொள்கை வெற்றியினையும், அண்ணல் அம்பேத்கரின் பெருமைகளையும், புரட்சிக் கவிஞரின் இனமான உணர்வுமிக்க கவிதைகளையும், திராவிட மாடல் ஆட்சி தமிழ் நாட்டிற்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களின் உரிமைகளை காக்கும் கேடயமாக செயல் பட்டு வருவதையும்,  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா பேருழைப்பையும்,விடுதலை இதழை வாசிக்கவேண்டி அவசியத்தையும் விளக்கி சிறப்புரையாற்றினார்.

ஒன்றிய செயலாளர் அ.ஜோசப் நன்றி கூறினார். நிகழ்வில் மாவட்ட ப. க தலைவர் துரை. செல்வம் முடியரசன், காரைக்குடி மாநகரத் தலைவர் ந. ஜெகதீசன், கல்லல் ஒன்றிய செயலாளர் கொரட்டி வீ. பாலு, காளையார் கோயில் ஒன்றியத் தலைவர் து. அழகர்சாமி, காளையார் கோயில் ஒன்றியச் செயலாளர் பா. இராஜ்குமார், சி. சூரியமூர்த்தி, சொ சேகர், சிவ. தில்லை ராசா, தொமுச செந்தில் குமார், திமுக மேனாள் நகர் மன்ற உறுப்பினர் ஜாகிர் உசேன் ஆகியோர் பங்கேற்றச் சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *