சென்னை, மே3- மத்திய தொகுப்பு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 2023 – 24இல், 8,290 கோடி யூனிட் மின்சாரத்தை, தமிழ்நாடு மின் வாரியம் வாங்கியுள்ளது.
இதன் மதிப்பு, 55,754 கோடி ரூபாய். இந்த ஆண்டில் மின்சார ஒழுங்கு முறை ஆணை யத்திடம் உத்தேசமாக ஒப்புதல் பெற்றதைவிட, 13,179 கோடி ரூபாய்க்கு 917 கோடி யூனிட் கூடுதலாக வாங்கப்பட்டுள்ளது.
உத்தேச வருவாய்
இதுதவிர, நெருக்கடி யான காலங்களில், மின் சார சந்தையில் இருந்தும், குறுகிய கால மின்சாரம் கொள்முதல் செய்யப்படு கிறது.
கடந்த, 2022 செப்டம் பரில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்காக, 2022 – 23 முதல் அய்ந்து ஆண்டுகளுக்கு தனித்தனியே, உத்தேச வருவாய், செலவு போன்ற வற்றை உள்ளடக்கிய மொத்த வருவாய் தேவை அறிக்கையை, மின்வாரியம் 2022ல், மின்சார ஒழுங்குமுறை ஆணை யத்திடம் சமர்ப்பித்தது.