தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் பூவத்தூரைச் சேர்ந்த திராவிடர் கழக மாவட்ட விவசாய அணி செயலாளர் பூவை ரெ.இராமசாமி (வயது-69) உடல்நலக் குறைவால் இன்று காலை (03-05-2025) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினோம்
மாணவர் பருவம் முதல் தந்தை பெரியார் கொள்கையை ஏற்று திராவிடர் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று செயல்படுத்தியவர்
மறைந்த நெடுவாக்கோட்டை வை.குப்புசாமி அவர்களின் குடும்பத்தின் உறவினர் என்ற முறையில் நம்மீது மிகவும் பற்று கொண்டவர் சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வில் இருந்தார் தொலைபேசியில் பலமுறை அவரை தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்து வந்தோம் மிகவும் அனைவரிடமும் பண்புடன் பழகக்கூடியவர்
அவரின் மறைவு அவரது குடும்பத்திற்கும் இயக்கத்திற்கும் அப்பகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும்
மறைந்த தோழர் ராமசாமி அவர்களுக்கு நமது வீரவணக்கம்
அவர் மறைவால் வாடும் அவரது வாழ்விணையர் இராணி, மகள் தமிழ்தென்றல் ஆகியோருக்கு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவிக்கிறோம்.
(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
3.5.2025
குறிப்பு: மறைந்த பூவை.இராமசாமி குடும்பத்தினரிடம் கைப்பேசி மூலம் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தார்.
இன்று மாலை 5 மணி அளவில் பூவத்தூர் அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்படும். அவரது உடல் மருத்துவமனை மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சிக்காக கொடையாக வழங்கப்படும்.
தொடர்புக்கு: மகள் தமிழ்தென்றல்-8838244827