இவருக்கு முன்பும் தாமஸ் சங்கரா Thomas Sankara என்ற இளவயது அதிபர் இதே போன்று மிகவும் புரட்சிகரமான திட்டங்களை அமல்படுத்தினார்.
பெண்களுக்கு கல்வி, பலதார மண ஒழிப்பு, பெண்களுக்கு திருமண வயது நிர்ணயித்தல், பிரெஞ்சு முதலாளிகள் வசமிருந்த அனைத்து மருத்துவமனைகளையும் அரசுடமை ஆக்கியது மற்றும் பெரும் நில உடைமையாளர்களிடமிருந்த நிலத்தை ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுத்தது, பிரெஞ்சு நிறுவனத்தில் அடிமைகளைப் போல் பணியாற்றுவதை தடுத்து புர்கினோ மக்கள் சொந்தமாக தொழில் தொடங்க பல திட்டங்களை அமல்படுத்துதல் போன்ற புரட்சிகரத்திட்டங்களை அமல்படுத்தினார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெருமுதலாளிகளும், பண்ணை உரிமையாளர்களும், பயங்கரவாதக் குழுக்களுக்கு பணம் கொடுத்து பிரெஞ்சு ராணுவத்தின் உதவியோடு தாமஸ் சங்கராவின் ஆட்சியைக் கவிழ்த்து அவரை மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்தனர்.
இந்த நிலையில் சங்கராவின் அடிச்சுவடைப் பின்பற்றி இப்ராஹிம் புர்கினோ பசோவில் புரட்சிகர திட்டங்களை அமல்படுத்தி வருகிறார்.