பெங்களூரு, மே2- கருநாடக மாநிலம், பெங்களூருவில் 22.4.2025 மாலை 6.30 மணிக்கு இணைய வழியில் கருநாடக மாநிலத் திரா விடர் கழகம் மற்றும் நிமிர் இலக்கிய வட்டம் இணைந்து புரட்சியாளர் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. கவிஞர் சுசித்ரா தமிழ் வாழ்த்துப் பாடலை பாடி துவங்கினார்.
நிகழ்ச்சியை நெறியா ளுகை செய்த நிமிர் இலக்கிய வட்டத்தின் செயலாளர் கவிஞர் செ.மா.கிருட்டிணகுமாரி அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
திராவிடர் கழக மாநிலச் செயலாளர் தலை மையேற்றார். அண்ணல் அம்பேத்கர் சட்ட அரசியலமைப்பு எழுத்து வடிவம் கொடுத்தது, அவரது செயல் வடிவங்கள் விளக்கி கூறினார்.
முதல் நிகழ்வாக ‘என் றும் தேவை அண்ணல்’ எனும் தலைப்பில் சிறப்பு கவியரங்கம் தொடங்கியது. இதில் கவிஞர் இரா.சண்முகம், கவிஞர் ஆரூர் சுகுமார், கவிஞர் விழுப்புரம் அதன், கவிஞர் கா.பாபுசசிதரன், கவிஞர் அமுதவள்ளி ஆகியோர் அண்ணலின் அருங்குணங்களையும், அரசியல் சட்டம் எழுதியமை குறித்தும் உணர்ச்சி பெருக்கோடு கவிதைகளை பாடி எழுச்சியூட்டினார்கள். நிமிர் இலக்கிய வட்டத் தலைவர் பெரும் பாவ லர் கவிஞர் பாபு சசி தரன், கவிஞர்களை இடை இடையே உற்சாக மூட்டி, கவிபாட உணர்வையூட்டி சிறப்பித்தார்.
நிறைவாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் அண்ணலின் பிறப்பு, கல்வி பயின்றது, இந்திய அரசமைப்பு சட்ட வரையறையை எழுத்து வடிவம் பெற உழைத்தது, தந்தை பெரியார் ஒத்த உணர்வு மிக்க கருத்தோடு பற்பல போராட்டங்கள நடத்தியது, பெரியாருடன் பர்மா சென்று புத்த – இயக்க மாநாடுகளில் கலந்து கொண்டது. மும்பையில் இஸ்லாமியத் தலைவர் ஜின்னா, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மூலம் கலந்துறவாடியது போன்ற அரியத்தகவல்களை நெடிய நேரம் சுவைபட எடுத்துரையாற்றினார்.
பின்னர் நெய்வேலி ஞானசேகரன், செந்தமிழ் விஜயன், எம்.சி.புரசை பகுதி கழகத் தலைவர் கோ.சண்முகம், கவிஞர் சுமித்ரா கவிஞர் லலிதா மோகன் நிகழ்வு குறித்து கவிதை வாயிலாகவும், கருத்துரை வழங்கி சிறப்பித்தனர்.
கருநாடக மாநில திராவிடர் கழகத் துணைத் தலைவர் பாவலர் சே.குணவேந்தன் நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் ஏராளமான அறிஞர் பெருமக்களும், கவிஞர்களும் காணொலி வழியாக இறுதி வரை கேட்டு மகிழ்ந்தனர்.