30.04.2025 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மா. சுப்பிரமணியன், கோடம்பாக்கம் மண்டலம், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.33 இலட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள பல்நோக்குக் கட்டடப் பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், மண்டலக்குழுத் தலைவர்எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்
ப. சுப்பிரமணி, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.