ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பெயரில் அமைந்த கொளத்தூர் பெரியார் மருத்துவமனைக்கு 4.3.2025 அன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நேரில் சென்று பார்வையிட்டார். மருத்துவமனை வார்டுகள் தோறும் சென்று பார்த்தார். அவரிடம் மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர்
கே. ேஹமலதா விளக்கி கூறினார். மருத்துவமனை, மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதி, சுகாதார பராமரிப்பு நோயாளிகளுக்கு மருத்துவர்களின் கனிவான சேவை குறித்து கி. வீரமணி பாராட்டினார். மருத்துவமனையில் உள்ள முக்கிய பிரமுகர்கள் வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டார். உடன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் சென்றிருந்தார்.
கல்வியும், மருத்துவமும்தான் ‘திராவிட மாடல்’ அரசின் இரு கண்கள் .கல்வி வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக திகழும் தமிழ்நாடு மருத்துவத்திற்கும் தனி கவனம் செலுத்தி வருகிறது.
தமிழ்நாடு, இந்தியாவில் சுகாதாரக் கட்டமைப்பை பிற மாநிலங்களையும்விட மிகச் சிறப்பாக வழங்கி வரும் மாநிலம்.
5 கிலோ மீட்டருக்கு ஒரு சுகாதார நிலையம், நகராட்சிக்கு ஓர் அரசு மருத்துவமனை, மாவட்டம் தோறும் ஒரு தலைமை மருத்துவமனை, பன்னோக்கு உயர் மருத்துவமனை என சுகாதாரக் கட்டமைப் பினை வலுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் பல அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்தி கொண் டிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்தார்.
சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் அரசு புறநகர் மருத்துவமனை 1986ஆம் ஆண்டு 100 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்டது.
சென்னை கொளத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு தரமான உயர் மருத்துவ சிகிச்சைகளை வழங்க கொளத்தூர் பெரியார் நகரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது தொகுதி மக்களுக்காக 23.5.2021இல் இந்த மருத்துவமனையை புனரமைக்க அடிக்கல் நாட்டினார். தனது ஆட்சியின் 100ஆவது நாள் சாதனையாக 13.8.2021 அன்று சுமார் 15 கோடி செலவில் புனரமைத்து 300 படுக்கைகளாக தரம் உயர்த்தி திறந்து வைத்தார்.
2 மாதத்தில் 16.10.2021 அன்று மருத்துவமனைக்கு ஏ.சி.எல்.எஸ். ஆம்புலன்ஸ் வழங்கினார். ஆறு மாத காலத்தில் 8.4.2022 அன்று 10 படுக்கைகள் கொண்ட டயாலிசிஸ் வார்டை திறந்து வைத்தார். 13.8.2022 அன்று ரூ.5.05 கோடி செலவில் 4 அறுவை அரங்கம், ஆக்ஸிஜன் உற்பத்தி நலன், மருத்துவக் கல்லூரிக்கு நிகராக RT – PCT ஆய்வகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
இம்மருத்துவமனையை உயர் சிறப்பு மருத்துவ மனையாக தரம் உயர்த்த 8.3.2023 அன்று புதிய மருத்துவ மனை கட்டடம் கட்ட தரை மற்றும் 3 தளங்கள் ரூ.55.07 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டினார். அதன் தொடர்ச்சியாக மேலும் சில சிறப்பு சிகிச்சைகள் வழங்குவதற்காக 4,5,6 தளங்களுடன் விரிவாக்க 7.3.2024 அன்று சுமார் ரூ.54.82 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்து அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்தப் பிரமாண்டமான மருத்துவமனையை 27.2.2025 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பெரியார் பெயர்
அனைவரும் பிரமிக்கத்தக்க வகையில் பிரமாண்ட மாக கட்டப்பட்ட இந்த மருத்துவமனைக்கு யார் பெயரை வைப்பது என்று ஆலோசிக்கப்பட்டது. தீவிர ஆலோ சனைக்குப் பிறகு மூடநம்பிக்கை சூழ்ந்து வியாதியால் பீடிக்கப்பட்டு இருந்த தமிழ்நாட்டைக் குணப்படுத்த பகுத்தறிவு வைத்தியம் பார்த்த தந்தை பெரியாரின் பெயரால் ‘பெரியார் அரசு மருத்துவமனை’ என்ற பெயர் சூட்டப்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசும்போது, ‘‘இந்த மருத்துவமனைக்குப் பெயர் வைப்பது தொடர்பாக, அமைச்சர் பி.கே.சேகர்பாபு என்னிடம் கேட்டார். அப்போது பெரியார் நகரில் இருக்கும் இந்தப் பெரிய மருத்துவமனைக்கு பெரியார் பெயரையே வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னேன். ஏனென்றால் அவர்தான் நம்முடைய சமூகத்தில் நிலவிய சமூகப் பிணிகளுக்கு மருத்துவம் பார்த்த சமூக மருத்துவர். பெரியார் பெயரைச் சூட்டியதில் பெரியாரின் தொண்டனாகப் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.
மருத்துவமனை ஆறு தளங்களின் சிறப்பம்சங்கள்
ஆறு தளங்களைக் கொண்ட இம்மருத்துவமனையில் 560 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆறு அறுவைச் சிகிச்சை அரங்குகள் உள்ளன. நவீன ரத்த வங்கி அமைக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டடத்தில் உள்ள ஆறு தளங்களின் சிறப்பம்சங்கள்:
தரைத்தளம்
« தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரசிகிச்சை முனைப்பு கூடம். « “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிக்கான பிரிவு. « MRI Scan வசதிகள். « செயற்கை கை, கால் தயாரிக்கும் கூடம்.
« இயன்முறை கூடம் (Physiotherapy) « மய்ய நுண்கிருமி நீக்கும் கூடம்(CSSD) « சலவைகூடம் ( Laundry) « வாகனம் நிறுத்துமிடம் (Stilt Parking – இங்கு கார்களும், இருசக்கர வாகனங்களும் நிறுத்த போதிய இட வசதி உள்ளது)
முதலாம் தளம்
«மகப்பேறு பிரிவு, பிரசவ அறை (Labour Ward), மகப் பேறுகான அறுவை அரங்க வளாகம் (OT Complex) 3 நவீன இரத்த வங்கி (Blood Bank) « பச்சிளங் குழந்தைக்கான தீவிர சிகிச்சை பிரிவு (NICU) « மாற்று திறனாளிகளுக்கான உள்நோயாளிகள் பிரிவு (Rehabilitation Ward) « போதை மறுவாழ்வு மய்யம் (Dc-addiction Center) «அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு (Post Operative Word)
இரண்டாம் தளம்
« முழு உடல் பரிசோதனை மய்யம்.(Master Health Checkup) « பெண்களுக்கான பொது மருத்துவ வார்டு. « தனி மற்றும் VVIP -க்கான கட்டண வார்டு.(Pay Ward) « குழந்தை நல மருத்துவ வார்டு. « தனிமைப்படுத்துதல் வார்டு.(Isolation Ward)
மூன்றாவது தளம்
« குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை வார்டு. (PICU) « (Paediatric Ward) குழந்தைகள் நல மருத்துவ வார்டு. « தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவு.(IMCU) « மகப்பேறு மருத்துவ தீவிர சிகிச்சை பிரிவு. (MICU) « உயர் சார்பு சிகிச்சை பிரிவு (HDU) « பிரசவத்திற்கு பின் கவனிப்பு வார்டு.(Post Natal Ward) « மகப்பேறு மற்றும் குடும்ப கட்டுப்பாடு வார்டு. (FP Ward)
நான்காம் தளம்
« கட்டண வார்டு (தனி அறை – டீலக்ஸ் அறை) (Special Ward) « மத்திய ஆய்வகம்.(Central Laboratory) « ஆண்களுக்கான மருத்துவ வார்டு. « இரைப்பை மற்றும் குடல் நோய்களுக்கான உள்நோயாளிகளுக்கான. (Medical Gastroenterology) « என்டோஸ்கோபி (Endoscopy) « செப்டிக் வார்டு. (Septic Ward) « ஊடுகதிர் பிரிவு (Radiology Department) « Suite Room (VVIP – Lounge).
அய்ந்தாம் தளம்
« இருதயவியல் (Cardiology Department) « இ.சி.ஜி. எக்கோ மற்றும் டிரெட்மில் சோதனை பிரிவு. (ECG, ECHO & Treadmill) « ஆஞ்சியோ அரங்கம்.(Cath Lab) « இதய சிகிச்சை உள்நோயாளிகள் பிரிவு. « இதயவியல் தீவிர சிகிச்சை பிரிவு.(ICCU) « ஆஞ்சியோ பின் கவனிப்பு வார்டு. « மூன்று அறுவை அரங்க வளாகம்.(OT Complex)
ஆறாம் தளம்
« நரம்பியல் உள்நோயளிகள் பிரிவு. « புற்று நோய் உள்நோயாளிகள் பிரிவு. « சிறுநீரகம் மற்றும் இரத்தநாளவியல் துறைக்ககான அறுவை சிகிச்சைக் குப் பின் கவனிப்பு வார்டு. « மருந்து மற்றும் உபகர ணங்கள் கிடங்கு.
இப்புதிய கட்டடத்தில் 4 மின்துாக்கி வசதிகள். ஜெனரேட்டர் வசதிகள், தீ தடுப்பு கட்டமைப்புகள், மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு மற்றும் CCTV போன்ற வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
உயர்சிறப்பு பிரிவுகள்
- இதய மருத்துவம்.(Cardiology), 2. புற்றுநோய் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை. (Oncology and Oncosurgery), 3. நரம்பியல் மருத்துவம்.(Neurology), 4. குடல் இரைப்பை மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை.(Medical and Surgical Gastroenterology),
5. இரத்தநாள அறுவை சிகிச்சை.(Vascular Surgery), 6. சிறுநீரக மருத்துவத்துறை (டயாலிசிஸ் பிரிவு)(Nephrology), 7. சிறுநீரக அறுவை சிகிச்சை (Urology), 8. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை. (Plastic Surgery),
9. முடக்குவியல் மருத்துவம்.(Rheumatology).
சிறப்பு மருத்துவ பிரிவுகள் : (Speciality)
- பொது மருத்துவம்(General Medicine), 2. பொது அறுவை சிகிச்சை (General Surgery), 3. மகப்பேறு மருத்துவம்( Obstetrics and Gynecology), 4. காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை (ENT), 5. எலும்பு அறுவை சிகிச்சை (Orthopaedics), 6. கண் அறுவை சிகிச்சை (Ophthalmology), 7. பல் மருத்துவம்(Dental Surgery), 8. நுரையீரல் மருத்துவம் (Thorasic Medi cine), 9. தோல் நோய் மருத்துவம்(Dermatology), 10. குழந்தைகள் மருத்துவம்(Pediatrics), 11. அவசர சிகிச்சை பிரிவு (Emergency Medicine), 12. மனநல மருத்துவம்((Psychiatry), 13. மயக்கவியல் துறை (Anaesthesia), 14. நோய்க்குறியியல் துறை (Pathology), 15. உயிர் வேதியியல் துறை(Biochemistry), 16. நுண்ணு யிரியல் துறை.(Microbiology).
நவீன வசதிகள் :
- மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவு. , 2. செயற்கை கை கால் தயாரிக்கும் கூடம்., 3. இயன்முறை கூடம். (Orthotic and Prosthetic Unit), 4. போதை மறுவாழ்வு மய்யம். (De addiction Centre), 5. நவீன இரத்த வங்கி (Blood Bank), 6. முழுஉடல் பரிசோதனை. (Master Health Checkup), 7. கட்டண அறைகள் (Pay and VVIP Ward), 8. ஆஞ்சியோ அரங்கம். (Cath lab), 9. தீவிர சிகிச்சை படுக்கைகள் – 200 (Intensive Care Unit), 10. டயாலிசிஸ் (Dialysis), 11. எண்டோஸ்கோபி (Endoscopy), 12. மத்திய ஆய்வகம் (Central Laboratory), 13. நவீன அறுவை அரங்கம். (O.T. Complex), 14. லேசர் சிறுநீரக கல் அகற்றும் இயந்திரம் (ESWL), 15. எம். ஆர்.அய் ஸ்கேன் (MRI Scan), 16. சி.டி ஸ்கேன்( CT Scan), 17. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (USG Scan), 18. டாப்ளர் ஸ்கேன் (Doppler Study), 19. கேண்டீன் வசதி. (Canteen), 20. பார்வையாளர்கள் தங்கும் இடம். (Visitors Hall)
தொகுப்பு: மிருத்திகா