நான் பிள்ளையாரை உடைப்பதும், இராமனைத் தூளாக்குவதும், இராமாயணத்தைச் சாம்பலாக்குவதும் எதற்காக? இதைப் போன்ற ஆபாசங்கள், விஞ்ஞானிகள் நிறைந்த நாடுகளில் இல்லாததை உணர்ந்ததால்தான். அவர்களுக்கில்லாத பிள்ளையாரும், இராமனும் நமக்கிருந்து என்ன நன்மைகள் செய்தன? ஆயிரக்கணக்கில் கடவுள்கள் இருந்தும் எந்த விதத்தில் நாம் அவர்களைவிட உயர்ந்தவர்களாக இருக்கிறோம்? அல்லது அவர்களுக்குச் சமமான அறிவையாவது அடைந்திருக்கிறோமா? சிந்திக்கும் போது இவைகளுக்கெல்லாம் காரணமாகத் தென்படுவது என்ன? இங்குள்ளதைப் போன்று பார்ப்பனர்கள் அங்கே உண்டா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’