சென்னை, ஏப்.27- தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் திராவிட இயக்கங்கள் என்றும் பாதுகாப்பாக இருக்கும் என வைகோ தெரிவித்தார்.
வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும், ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக் கை களை வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் சென்னை மாவட்ட ஆட் சியர் அலுவலகம் அருகில் நேற்று (26.4.2025) ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி. மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கி னார். இதில் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்பட பலர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசியதாவது:-
பொது சிவில் சட்டம்
ஒன்றிய அரசு நாடாளுமன் றத்தில் காஷ்மீர் அரசியல் சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற மசோதா கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். அதே போலவே, ஹிந்தியை திணிக்க வேண்டும் என்பதற்காக ஒரே நாடு ஒரே மொழி என பேச ஆரம்பித்திருக்கின்றனர். இதற்கெல்லாம் தலைமை தாங்குபவர் பிரதமர் நரேந்திர மோடி. நாங்கள் தொடர்ந்து கண்டனத்தை தெரிவித்து வருகிறோம்.
வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு தீவிரமாக உள்ளது. பெரும்பான்மை இருக்கிறது என்ற எண்ணத்தில் பா.ஜனதா இதுபோன்று செயல்ப டுகிறது. தமிழ்நாடு அரசு இதற்கு இடம் கொடுக்காமல் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றியுள்ளது.
பொது சிவில் சட்டம் வந்தால் அனைத்து மதங்களும் உரிமைகளை இழந்துவிடும். இந்திய ஒருமைப்பாட்டுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தும். பல தேசிய இனங்களை கொண்ட இந்தியா உடைந்து போகும்.
இதுவரை தமிழ்நாட்டில் எந்த ஆளுநரும் அகந்தையோடும் ஆணவத்தோடும் பேசியது கிடையாது. ஆளுநரை ஒன்றிய அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். விபரீத வேலை வேண்டாம். அவரை பா.ஜனதா அலுவலகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். துணைவேந்தர்கள் மாநாட்டை கூட்டுவதற்கு ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. என்ன தைரியத்தில் குடியரசுத் துணைத் தலைவரை சிறப்பு விருந்தினராக அந்தமாநாட்டிற்கு அழைத்து வந்தார்.
குடியரசு துணைத் தலைவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடாது. ஆளுநருக்கும், அரசுக்கும் நடக்கும் மோதலை ஏடுகளை புரட்டிப் பார்த்தால் நீங் கள் இங்கு வந்திருக்க மாட்டீர்கள்.
தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து சிறுபான்மை மக்களையும் பாதுகாக்கிற இயக் கம் திராவிட இயக்கம். சிறு பான்மை மக்களுக்கு திராவிட இயக்கங்கள் என்றும் பாதுகாப்பாக இருக்கும். இவ்வாறு வைகோ பேசினார்.