சென்னை, ஏப்.27- ஒன்றிய அரசின் சட்டப் பூர்வ ஆணையமாக செயல் படும் இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்க ளுக்கு என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண் ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப் பதாரர்களுக்கு மாதம் ரூ.1.40 லட்சம் ஊதியம் வழங்கப்படும்.
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. விமான நிலையங்களில் கட்டுப்பாட்டு பணிகள், விமான நிலைய மேம் பாட்டு பணிகள் உள் ளிட்ட பல்வேறு பணி களை விமான நிலைய ஆணையம் செய்து வருகிறது. நாடு முழுவதும் 34 பன்னாட்டு விமான நிலையங்கள், 10 கஸ்டம்ஸ் விமானங்கள், 81 உள்நாட்டு விமான நிலையங்கள் என சுமார் 137 விமான நிலையங்களை விமான நிலைய ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
ஒன்றிய அரசின் சட்டப்பூர்வ ஆணையமாக செயல்படும் இந்திய விமான நிலைய ஆணை யத்தில் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
ஒன்றிய அரசு நிறு வனத்தில் வேலை.. சென்னை தரமணியில் பணியிடம்! 12 ஆம் வகுப்பு முடிச்சிருக்கீங்களா
பணியிடங்கள் விவரம்:
ஜூனியர் எக்ஸ்கியூட் டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) – 309 பணியிடங்கள் நிரப்பப் படுகின்றன. இந்த பணி யிடங்களுக்கு விண்ணபிக்க விரும்புவர்கள் அங்கீ கரிக்கப்பட்ட கல்வி நிலை யத்தில் இருந்து பி.எஸ்.சி படித்து இருக்க வேண்டும். இயற்பியல் மற்றும் கணித பாடப்பிரிவுகளை எடுத்து படித்து இருப்பது அவசியம் அல்லது ஏதாவது ஒரு பாடப்பிரிவை கொண்ட என்ஜினியரிங் படிப்பு முடித்து இருந்தால் போதும். தமிழ் மற்றும் ஆங் கிலம் நன்கு உரையாடவும் எழுதவும் தெரிந்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
ஜூனியர் எக்ஸ்கியூட் டிவ் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பு வர்கள் 24.05.2025 தேதிப்படி 27 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி / எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் என்றால் 32 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 30 வயது வரையும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் என்றால் 37 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.