புதுடில்லி, ஏப். 26 நாடு முழுவதும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை அரசியலமைப்புக்காக போராட்டங்களை மேற்கொள்ளவிருப் பதாக காங்கிரஸ் கட்சி அறிவித் துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களுடன் பேசுகையில், “அரசமைப்பைக் காப்பாற்றும் போராட்டம் ஏப்ரல் 25 முதல் ஏப்ரல் 30 வரையில் பிரதேச காங்கிரஸ் கமிட்டி அளவிலும், மே 3 முதல் மே 10 வரையில் மாவட்ட அளவிலும், மே 11 முதல் மே 17 வரையில் நாடு முழுவதும் 4,500 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைபெறும். தொடர்ந்து, மே 20 முதல் மே 30 வரையில் வீட்டுக்குவீடு பிரசாரமும் நடத்தப்படும்.
காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகத்தை ஒன்றிய பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. இது, அரசியல் பழிவாங்கும் வழக்கே. மேலும், இது ஒரு சட்டரீதியிலான பிரச்சினை அல்ல; இது, ஓர் அரசியல் துன்புறுத்தல், அச்சத்தைத் தூண்டும் அரசியல் பிரச்சினை. என்றார் அவர்.