சேலம், ஏப்.26 சேலம் அடுத்துள்ள ஓமலூரில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. கோயில் திருவிழாவுக் காகப் பட்டாசுகள் எடுத்துச் செல்லப் பட்டபோது எதிர்பாராத விதமாக அது வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந் துள்ளனர்.
வெடி விபத்து
சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பூசாரிப்பட்டி அடுத்துள்ள கஞ்சநாயக்கன் பட்டி திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயிலில் திருவிழா நடந்து வருகிறது. அம்மன் கோயில் திரு விழாவுக்காக வாணவேடிக்கைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
எனவே, திருவிழாவுக்குத் தேவையான பட்டாசுகளை இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது அந்தச் சாலையில் குப்பை எரிந்து கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வழியாகச் சென்ற இரு சக்கர வாகனம் திடீரெனக் கட்டுப் பாட்டை இழந்த நிலையில், தீயில் விழுந்துள்ளது. அப்போது அதில் இருந்த பட்டாசுகள் உடனடியாக தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.
3 பேர் பலி
எதிர்பார்க்காத நேரத்தில் நடந்த இந்த விபத்தால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தால் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் கஞ்சநாயக்கன்பட்டி கோட்டை மேட்டை சேர்ந்த செல்வராஜ் (29) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்த மற்ற இருவரை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களில் ஒரு குழந்தையும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பலர் படுகாயம்
மேலும், இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. இந்தச் சம்பவம் சம்பவம் தொடர்பாக ஓமலூர் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழா நேரத்தில் நடந்த தீவிபத்து அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.