டாக்டர் மு. வரதராசனார்
பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 25, 1912)
டாக்டர் மு. வரதராசனார் 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். பன்முக ஆற்றல்கள் கொண்ட இவர் நல்லாசிரியராகவும், பண்பாளராகவும் விளங்கினார்.
மு.வ.வின் அகல் விளக்கு எனும் புதினத்திற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. கள்ளோ காவியமோ, அரசியல் அலைகள், மொழியியல் கட்டுரைகள் ஆகிய மூன்று நூல்களுக்குத் தமிழ்நாடு அரசின் விருது கிடைத்தது. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மொழிநூல், கள்ளோ காவியமோ. அரசியல் அலைகள், விடுதலையா, ஓவச் செய்தி ஆகிய ஆறு நூல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றன.
****
தருமபுரியில் தமிழ்நாடு மேனாள் நிதியமைச்சர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் உருவச்சிலை திறப்பு விழாவில் தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டு பெரியார் சிலையை திறந்து வைத்த நிகழ்வில் தந்தை பெரியார் அவர்களும் கலந்து கொண்ட நாள் இன்று (25-04-1969).