சிறீநகர், ஏப்.25 காஷ்மீர் மக்களை எதிரி களாக கருத வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு ஜம்மு – காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வேண்டு கோள் விடுத்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்கா மில் கடந்த 22ஆம் தேதி நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு நாடுமுழுவதும் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டும், எதிராக போராட்டமும் நடந்து வரும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித் துள்ளார்.
காஷ்மீர் மக்களை எதிரிகளாக நினைக்கிறார்கள்
செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருப் போம் என்றும், இந்தச் சம்பவத்துக்காக காஷ்மீர் மக்களை குற்றம் சாட்ட வேண்டாம் என்றும் நாட்டு மக்களிடம் கேட் டுள்ளார்.
“தங்களின் விடு முறையை கழிக்க இங்கு வந்த 25 விருந்தி னர்களானாலும் சரி, அங்குள்ள மக்களின் உயிரைக் காப்பாற்ற தனது உயிரைத் தியாகம் செய்த இப்பள்ளத்தாக்கைச் சேர்ந்த நபரானாலும் சரி இந்தத் துயரமான சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்களின் குடும்பத் தினருக்கு எனது பொறுப்புணர்வை தெரி விக்க விரும்புகிறேன். அதேபோல், தாக்குதலுக்கு பின்பு வெளியே வந்து அதனைக் கண்டித்த காஷ்மீர் மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
காஷ்மீர் மக்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இது அவர்களுக்காக நடத்தப்பட்டது இல்லை என்பதைத்தான். நாட்டு மக்களிடம் நான் ஒரு விஷயத்தைத் தான் கேட்டுக்கொள்கிறேன். காஷ்மீர் மக்களை உங்களின் எதிரிகளாக கருத வேண்டாம். நாங்கள் குற்றவாளிகள் இல்லை. கடந்த 35 ஆண்டுக்கும் மேலாக நாங்களும் இதனால் துன்பப்பட்டு வருகிறோம். தயவுசெய்து அதுபோன்று பேசுவதை தவிர்க்கவும், அவைகளை நிறுத்துமாறும் நாங்கள் வேண்டுகிறோம். காஷ்மீர் மக்கள் அமைதிக்கு எதிரானவர்கள் இல்லை. அவர்கள் அமைதியை விரும்புகிறவர்கள். நடந் தவைகள் எல்லாம் எங்களின் விருப்பத்துக்கு எதிரானவை. இவ்வாறு நடக்கக்கூடாது என்பதே எங்களின் விருப்பம். நடந்த சம்பவம் மிக மோசமானதாகும். என்று தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.