கன்னியாகுமரி, ஏப்.25 கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக உலக புத்தக நாள் விழா நிகழ்ச்சி நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.
கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி உரையாற்றினார். கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினார். திமுக இராசாக்கமங்கலம் ஒன்றிய செய லாளர் ஆ. லிவிங்ஸ்டன் தந்தை பெரியாருடைய நூல்களைப் பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ. சிவதாணு, திமுக பொறி யாளர் அணி தலைவர் முனைவர் இராஜேஷ் இரத்தினமணி, கழகத் தோழர்கள் எ.ச. காந்தி, அஃப்ரின் சில்வான்ஸ் ஆகியோர் உரையாற்றினார்கள். பெரியார் பெருந்தொண்டர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், மாவட்ட துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர் த.பிராங்ளின், திருவரம்பு விஜய் உள்ளிட்ட
பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்துகொண்டு உலக புத்தகநாளில் திராவிடர் இயக்க நூல்களை ஆர்வமாக வாங்கினர். மாவட்ட பகுத்தறிவாளர்கழக செயலாளர் எம்.பெரியார் தாஸ் நன்றி கூறினார்.